இடைத்தேர்தல் முடிவு.. அதிமுகவுக்கு குட்டு.. தவெகவுக்கு பாராட்டு.. அன்புமணி கணக்கால் மாறும் அரசியல்

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. தவெகவுக்கு பாமக மறைமுக ஆதரவு கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளில் அதிமுகவை விமர்சித்தும், தவெகவை பாராட்டியும் அன்புமணி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்றது. கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம் எடைத்தேர்தலாக நடைபெற்றது. எடைக்கு எடை பணம், பொருள் மக்களை ஆடுகள், மாடு போல சந்தையில் அடைத்துவைத்து பணத்தை கொடுத்து, மதுவை கொடுத்து உணவை கொடுத்து வாக்களித்து வெற்றி பெற்ற கட்சிகளை பார்த்தோம்.

ADMK Anbumani

தவறான எண்ணம் இல்லை

ஆனால் இன்றைக்கு பணம் கொடுக்காமல் பிரச்சாரம் செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஜனநாயகப்படி சந்தித்த இடைத்தேர்தல் இது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் இந்த இரண்டு தொகுதிகளில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

அதேநேரத்தில் சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்டது அதிமுக. இவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை நான் தவறாக சொல்லவில்லை. நல்ல எண்ணத்தோடு சொல்கிறேன். 5 மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற கட்சி இன்றைக்கு மூன்றாமிடம். தமிழகத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி என்கிற வகையில் நல்ல ஆலோசனையாக சொல்கிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை.

தவெகவுக்கு அனுபவமில்லை

கர்நாடகாவுடன் காலம் காலமாக பிரச்சனை உள்ளது. இதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இறுதி தீர்ப்பு எதையும் கர்நாடகா மதிக்கவில்லை. மேகதாதுவை கட்டியே தீர்வோம் என்றிருக்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயம் செய்ய முடியாத நிலை. மேகதாது கட்டினால் நிலைமை இன்னும் மோசமாகும். முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்யவேண்டும். நாங்கள் 100 முறை சொல்லியும் செய்யவில்லை.

இது தவெக பிரச்சனை இல்லை. மேகதாது கட்ட கூடாது என்பதற்கு பலவிதமான வழக்குகளை போட வேண்டும். இது தவெக பிரச்சனையல்ல. தமிழகத்தின் பிரச்சனை என்பதால் அனைத்தையும் காது கொடுத்து கேட்க வேண்டும். கர்நாடகாவின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். விஜய் தலைமையிலான அரசுக்கு அனுபவம் போதாது. கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தானே இப்போதும் இருக்கிறார்கள்.

அன்புமணி பரபரப்பு

அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அரசு அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும். எல்லாமே வதந்திகள் தான். தவெகவிடம் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. இனி கேட்க போவதுமில்லை. தெளிவாகிவிட்டதா. அரசியலில் என்ன வேண்டுமானாலும் பார்க்கலாம்" என்றார். அன்புமணியின் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+