கோவை மேடையில் சட்டென அண்ணாமலை செய்த செயல்.. முகம் மாறிய மோடி
கோவை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அண்ணாமலை செய்த செயலால், பிரதமர் மோடியின் முகத்தில் மாற்றம் தென்பட்டது.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரச்சார பொது கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, "திமுகவின் காட்டாச்சியை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக மோடி வருகை புரிந்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.

திமுக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக
கஞ்சா புழக்கம் ஒழிக்கப்படும். திமுக மற்றும் காங்கிரஸ் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மகளிருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தமிழக மக்களின் ஒரு வாக்கு கூட செல்ல கூடாது. குடும்ப ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பெண்கள், குழந்தை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.
2009 குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தது அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி. 2016 தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுக, காங்கிரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மகளிருக்கும் விரோதிகள். அடுத்த 3 நாட்கள் நம் கட்சியினர் கண் துஞ்சாமல் பணியாற்ற வேண்டும்.
கூட்டத்தில் நடந்த மாற்றம்
வருகின்ற நாட்கள் மிகவும் முக்கியமானது. திமுக இனி தமிழகத்தை எப்போதும் ஆட்சி செய்ய முடியாது என்கிற தீர்ப்பை ஏப்ரல் 23 ஆம் தேதி எழுத வேண்டும். பிரதமருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க வேண்டும். உங்கள் கையில் உள்ள செல்போனில் டார்ச்சை ஆன் செய்து பிரதமரிடம் காட்டுங்கள்.
தமிழகத்தின் இருட்டு ஆட்சியில் இருந்து வெளிச்சம் வேண்டும், மக்கள் வெளிச்சத்தை நோக்கி செல்கிறார்கள். திமுகவின் இருட்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்பதற்காக டார்ச் ஆன் செய்யுங்கள்" என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த அனைவரும் டார்ச்சை ஆன் செய்து காட்டினார்கள். இதில் மோடி உற்சாகமானார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications