2024 தேர்தலில் நான் கோவையில் போட்டியிட மாட்டேன்.. அண்ணாமலை பரபர அறிவிப்பு! என்னாச்சு?
கோவை : வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்த நிலையில், இன்று அண்ணாமலை பேசியுள்ள விஷயம் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இரட்டை இலக்க சீட்களில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புவதாகத் தெரிகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக 25 எம்.பி சீட்களில் ஜெயிக்கும், அதில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆவார்கள் எனப் பேசி வந்தார். அதிக சீட்களில் போட்டியிடுவதற்கு தோதாக, அதிமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவிலும் அண்ணாமலை இருந்து வந்தார்.
ஆனால், பாஜக மேலிடம், 2024 தேர்தலுக்கு அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. முடிந்தவரை அதிக சீட்களைப் பெற்று களமிறங்க வேண்டும் என்பதிலும் பாஜக கவனமாக உள்ளது. கடந்த பல மாதங்களாகவே தமிழ்நாட்டின் 10 தொகுதிகளில் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் வகையில், பாஜக கூட்டங்கள் அடிக்கடி கோவையில் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணாமலையும் அடிக்கடி கோவை சென்று வருகிறார். இந்நிலையில் தான் தான் எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே நான் பாஜகவிற்கு வந்திருக்கிறேன். கோவை தொகுதியில் நிற்பதற்கு கட்சியில் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே என் வேலை.
மாநிலத் தலைவராக, பாஜகவிற்கு ஒரு தொண்டனாகவே பணியாற்ற நினைக்கிறேன். தமிழ்நாட்டை விட்டு டெல்லி அரசியலுக்கு செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணிலேயே என் அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த காரணத்திற்காகவும் டெல்லி அரசியலுக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications