உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.. அப்படிப்பட்ட அரசியலே வேண்டாம்! அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கோவை: உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

Annamalai says that we dont bring exemption for Neet Exam


அந்த வகையில் கோவை தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் அண்ணாமலை நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் அவர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் "குடிநீர் இணைப்பு இலவசம் என்று கூறுகிறீர்கள். ஆனால் ரூ 3 ஆயிரம் கேட்கிறார்கள். நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படியிருக்கும் போது ஏன் அந்த தேர்வை கட்டாயப்படுத்துகிறீர்கள்.

அது போல் அரிசி பருப்பு ஜிஎஸ்டி எதற்கு, நதிநீர் இணைப்பு திட்டம் அறிவித்ததோடு சரி, ஏன் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் குறைகளை கேட்க வேண்டும்.

ஆடு கூட இதை செய்யும்..ஆனா 'அவங்க’ செய்யமாட்டாங்க..! இது தான் வர்ற நேரம்.. ஆக்‌ஷனில் இறங்கிய அண்ணாமலை


ஆனால் இன்று நிலை அப்படியில்லை, வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் யாருமே தொகுதி பக்கமே வருவதில்லை. நான் வெற்றி பெற்றதும் நீங்கள் என்னை அணுகும் வகையில் நான் இருப்பேன். இந்த தொகுதியின் நிலை அடுத்த கட்டத்திற்கும் உயரும்.

இந்த கேள்விகளையெல்லாம் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எத்தனை பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வேண்டாம் என்கிறீர்கள்? முதலில் ஆறு வரியாக செலுத்தி வந்ததை ஜிஎஸ்டி என ஒரே வரியாக கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி இல்லாமல் எப்படி மக்கள் பணி மேற்கொள்வது.

போலீஸாருக்கு அரசு அதிகாரிகளுக்கு எப்படி ஊதியம் வழங்குவது சொல்லுங்கள்? இவர்களுக்கு ஊதியம் கொடுக்க பிரதமர் மோடி என்ன ரூபாய் நோட்டை அச்சடித்து வருகிறாரா என்ன? இன்னொன்று நீட் தேர்வு குறித்து கேட்டீர்கள். அதாவது எங்களின் உயிரே போனாலும் நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய மாட்டோம்.

முதல்முறையாக ஏழை மாணவ, மாணவியர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார்கள். நீட் தேர்வை எடுத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் எங்களுக்கு தேவையில்லை. கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும்.

இல்லாவிட்டால் திமுக அமைச்சர்களின் மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துதான் படிக்க முடியும். இப்படி கோடிக்கணக்கான பணத்தை ஏழைகளால் செலவு செய்ய முடியுமா? எந்த மாணவர்களும் நீட் தேர்வு காரணமாக இறக்கவில்லை, அவர்களை தூண்டுவிடுகிறார்கள். 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை காவிரி பிரச்சினை இல்லை.

ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. நதி நீர் இணைப்புக்கு ரூ 2.50 லட்சம் கோடி ரூபாய் வேண்டும். இவ்வளவு பணம் தமிழக அரசிடம் உள்ளதா, உங்கள் ஊரில் குடிநீரையே தமிழக அரசால் சரிவர வழங்க முடியவில்லையே இதில் நதி நீர் இணைப்புக்கு எப்படி முன்வருவார்கள் என கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+