ஜார்க்கண்ட் ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன்.. கோவை லோக்சபா சீட் ரேஸில் அண்ணாமலை, வானதி சீனிவாசன்!
கோவை லோக்சபா சீட் ரேஸில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜகவின் கோவை முகமான சி.பி. ராதாகிருஷ்ணன் எனும் சிபிஆர் நியமிக்கப்பட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கோவை தொகுதியை தட்டிப் பறிக்கப் போவது யார் என்கிற விவாதம் பாஜகவில் பரபரக்க தொடங்கிவிட்டது.
கோவை சிபிஆர் எனும் சிபி ராதாகிருஷ்ணன்.. 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று அசர வைத்தார். அந்த தேர்தலில் திமுகவின் கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகளில் வீழ்த்தி லோக்சபா எம்பியானார் சிபிஆர்.

1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார் சிபிஆர். அப்போது கோவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு போட்டியிட்டார். இந்த தேர்தலில் இரா.நல்லகண்ணுவை 54,077 வாக்குகளில் தோற்கடித்து பெரும் பேசுபொருளாகினார்.
பின்னர் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2014-ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது கோவை தொகுதியில் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் 2019-ம் ஆண்டு 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
கோவை லோக்சபா தொகுதியை பாஜகவுக்கு நம்பிக்கை தரக் கூடிய ஒரு தொகுதியாக வளர்த்தெடுத்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மத்திய அரசின் கயிறு வாரியத் தலைவர் பதவியையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கோவை லோக்சபா தொகுதியை பெறப் போவது யார்? என்ற விவாதம் பாஜகவில் அனல்பறக்கிறது.
கோவை பாஜகவின் இருமுகங்களாக இருப்பவர்கள்தான் சிபிஆரும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும். கோவை தெற்கு சட்டசபையில் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருப்பவர். இதனால் லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியை வானதி சீனிவாசன் நிச்சயம் கேட்டு பெறுவார்; மத்திய அமைச்சராவார் என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றது முதல் ஆளும் திமுகவுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக பாஜகவை உருவாக்கியவர் அண்ணாமலை. அதனால் அவருக்குதான் நிச்சயம் கோவை தொகுதியை பாஜக மேலிடம் வழங்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதனை முன்வைத்து இப்போது பாஜகவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications