Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா.. இதை நோட் பண்ணுங்க.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசகிக்காக 2,495 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்பது குறித்து கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும்.. இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

chennai omni bus diwali

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இன்று முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்ளுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்..

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1,030 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல்லை அடுத்துள்ள தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டுமே சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 540 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர் செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து 100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து 100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்லும் பேருந்துகள் சாய்பாபாகாலனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 350 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராஜபாளையம் செல்லும் பேருந்துகள் வழக்கமாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக 2,495 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை சிங்காநல்லூர் மற்றும் சூலூர் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மட்டுமே இறக்கிவிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மற்ற பேருந்து நிலையங்கள் வழக்கம் போல் செயல்படவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்து நிலையங்களிலும், பயணிகளுக்கென குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மழையின் காரணமாக பயணிகள் நிற்பதற்கு தற்காலிக கூடாரங்கள், மின்விளக்கு வசதி, சுகாதார வசதி ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+