Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சென்டிமென்டாக அவிநாசி கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் வியூகங்களை வகுக்கிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள்.

Assembly Election 2026 Annamalai L Murugan

கூட்டணி தொகுதி பங்கீடு

திமுக சுமார் 22 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்தளவுக்கு கட்சிகள் இணையவில்லை. இருக்கின்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

அதிமுக கூட்டணியில் பாஜக சுமார் 30 தொகுதிகளை எதிர்பார்க்கிறதாம். அதிமுக அவர்களுக்கு 25 தொகுதிகளை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாம். ஆனாலும் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

அவிநாசியில் எல். முருகன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறுகிறார். வடக்கு தொகுதியில் அவர் ஏற்கனவே பணிகளை தொடங்கிவிட்டார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடந்த முறை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்தமுறை அவர் அவிநாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

முருகன் நேற்று அவிநாசி காசி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அவர் அவிநாசி தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று உரையாடினார். அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் வழங்கவில்லை.

சிங்காநல்லூரில் அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2021 தேர்தலில் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடவதாக கூறப்பட்டது.

நேற்று மாலை கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள பாஜக நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி வீட்டிற்கு அண்ணாமலை சென்றார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. பாலாஜி உத்தமராமசாமி சிங்காநல்லூர் தொகுதி பாஜக பொறுப்பாளராகவும் இருந்தார்.

இதன்மூலம் அண்ணாலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்ணாமலை இதை உறுதி செய்யவில்லை. "தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+