கோவை அவிநாசி மேம்பாலம் பணியில் ட்விஸ்ட்.. தூண்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவு.. தாமதமாகும் திறப்பு
கோவை: கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஏறு தளம் அமைப்பதற்கான தூண்களை தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 தூண்களை இடித்துவிட்டு, திட்டமிட்ட இடத்தில் தூண்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
அவிநாசி மேம்பாலம்
தமிழ்நாட்டின் 2வது பெரிய நகரமாக கோவை மாவட்டம் விளங்கி வருகிறது. கோவை மாநகரில் மக்கள் தொகை நெருக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கோவையின் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். குறிப்பாக, அவிநாசி சாலையில் பீக் ஹவர்களில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்தப் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 95 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. ரூ. 1,621.30 கோடியில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. விமான நிலையம், ஹோப்ஸ் காலேஜ், நவ இந்தியா, போலீஸ் பயிற்சி மைதானம் முன்பு என, நான்கு இடங்களில் இறங்கு தளங்கள், ஏறு தளங்கள் அமைக்கப்படுகின்றன.
மேம்பாலம் திறப்பு
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து இந்த மாத இறுதியில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் கடைசியில் தான் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். அவிநாசி மேம்பாலத்தை, கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ தொலைவுக்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
அந்தப் பணிகளும் தொடங்கவில்லை. தற்போது மேம்பால பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து நெரிலை மேலும் அதிகரித்துள்ளது. அவிநாசி சாலையில் சிக்னலை தவிர்த்துவிட்டு நடைமுறையில் உள்ள யூடர்ன் முறையினாலும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் மேம்பாலம் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேம்பால தூண்கள்
ஆனால் அதில் மேலும் ஒரு சிக்க எழுந்துள்ளது. அவிநாசி சாலையில் தனியார் ஹோட்டலுக்கு சாதகமாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் மேம்பாலம் தூண்கள் எழுப்பியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ஏற்கனவே அமைத்தை திட்டத்தை மாற்றி, தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக திட்டத்தை மாற்றியமைத்ததாக புகார் எழுந்துள்ளது.
பாதுகாப்புதான் முக்கியம்
இந்த வழக்கை நீதிபதி பரத சக்ரவர்த்தி விசாரித்தார். 4 தூண்கள் திட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், "மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். தூண்களை இடம் மாற்றும்போது மேம்பாலத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இங்கு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக 4 தூண்களை நகர்த்தியுள்ளனர்.
இடித்து அகற்ற உத்தரவு
எனவே அந்த தூண்களை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும். மேலும் அந்த 4 தூண்களை ஏற்கனவே வடிவமைத்தபடி, 30 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் தங்கள் சொந்தப் பணத்தில் தலா ரூ.1,000 முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் "என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேம்பாலம் திறப்பு மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications