"நான் அவனில்லை".. புதிய வீடியோவில் இருப்பது நான் இல்லை.. பார் நாகராஜ் பரபரப்பு விளக்கம்
Recommended Video

கோவை: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக புதிதாக வெளியான வீடியோவில் இருப்பது நான் இல்லை என பார் நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார வீடியோ வெளியான விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியே இந்த விவகாரம் வெளியே வந்திருந்தாலும் வழக்கு இத்தனை நாட்களாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 20 பேர் கொண்ட பெரிய நெட்வொர்க் என கூறப்படும் நிலையில் தற்போது வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதால் கடும் எதிர்ப்பு நிலவியுள்ளது.

புதிய வீடியோ
கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 4 புதிய வீடியோக்கள் வெளியாகின.

டாஸ்மாக்
அதில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷுடன் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஒரு வீடியோவில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகராஜுக்கு சொந்தமான டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்.

அடிதடி வழக்குகள்
மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பார் நாகராஜ் தான் பேசும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல. சதீஷ்தான். என் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருக்கிறது.

பரபரப்பு வீடியோ
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கோ புகாரோ என் மீது கிடையாது. என் மீதான அடிதடி வழக்குகள் குறித்து காவல் துறை விசாரணைக்கு அழைத்தாலும் அதற்கு நான் ஆஜராவேன் என தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பார் நாகராஜ் தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் பேசும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications