பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் பகல் கொள்ளை.. பணியாளர்களின் சம்பளத்தில் ஊழல்.. தலைசுற்றும் புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான முறைகேடு நடப்பதாக புகார் உள்ளது. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அன்றாட பணிகளில் ஏராளமான குளறுபடி ஏற்படுகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் சம்பளத்தில் ரூ.1,000 - 3,000 பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இஎஸ்ஐ, பிஎப், காப்பீடு போன்றவற்றில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் தலை சுற்ற வைக்கிறது.

பாரதியார் பல்கலைக்கழகம் பணியாளர்கள் நலச்சங்கத்தினர், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள புகாரில், "பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 324 தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். தோட்டப்பணி, தூய்மை பணி மற்றும் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகிறோம். பல்கலைக்கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கான அடிப்படை சலுகை தருவதில்லை.

bharathiar-university-faces-allegations-of-salary-deductions-esi-and-pf-irregularities

கறார் வசூல்

தொழிலாளர்களுக்கான காப்பீட்டு தொகையை பணியில் சேர்ந்த நாளில் இருந்து பிடித்தம் செய்யவில்லை. அரசு காப்பீட்டின் கீழ் கிடைக்கும் மருத்துவ பலன் உள்ளிட்ட அனைத்து பலன்களும் மறுக்கப்படுகிறது. 2019 நவம்பர் முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்திற்கான ஊழியர்களின் இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை தற்போது வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இஎஸ்ஐக்கான பங்களிப்பை பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்தாலும் அதை முறையாக செலுத்தவில்லை.

தகுதியுள்ள பணியாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்யவில்லை. பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை கூட பெற முடியவில்லை. தற்போது அதில் உள்ள பணியாளர்கள் பலரும் இஎஸ்ஐக்கான வரம்பை கடந்துவிட்டனர். இப்போது வசூல் செய்வதால் எந்த பலனும் கிடைக்காது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இஎஸ்ஐ பங்களிப்பு தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பணியாளர்களிடம் இருந்து ஏற்கனவே வசூலித்த தொகையை திருப்பி வழங்க வேண்டும்.

தகவல் இல்லாமல் பிடித்தம்

மேலும் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியும் சரியாக பயன்படுத்தவில்லை. முந்தைய காலத்துக்கான பி.எப் தொகையை தற்போது பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்கிறார்கள். சம்பளத்தை உரியமுறையில் செலுத்தாமல் தற்போது பிடித்தம் செய்வது தவறாகும். பணியாளர்களிடம் எந்த முன்அறிவிப்பும் ரூ.1,000 முதல் 3,000 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

சம்பளம் வந்த பிறகு விளக்கம் கேட்டும் நிர்வாகம் உரிய பதில் கொடுக்கவில்லை. இதனால் குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த விதிமீறல் குறித்து நேரடியாக விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் புகாரை விசாரித்து பாரதியார் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களுக்கு மறுக்கப்படும் அனைத்து பலன்களும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+