பொள்ளாச்சி போறீங்களா? திருப்பி விடப்படும் வண்டிகள்.. ஒரே நாளில் ரூட்டே மாறுது.. இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு இன்று வருகை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. இதையடுத்து, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் இன்று 13ம் தேதி நடக்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில், முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

Big Change in Traffic till today due to CM Stalins Pollachi visit and 4 Tamil Nadu Government inaugurate Functions

கோவை விமான நிலையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு விழாவில், ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.. முதல்வரின் இன்றைய வருகையையொட்டி, விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி போன்றவையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன...

அறிவுறுத்தல்: கோவை, பொள்ளாச்சிக்கு முதல்வர் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. அதேபோல, முதல்வர் வருகையையொட்டி திமுகவினர் ப்ளக்ஸ் போர்டு, கட் அவுட்கள் வைக்கக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.

முதல்வரின் வருகையையொட்டி, பொள்ளாச்சி பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சி சாலை: அதில், "பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து பாலக்காடு ரோட்டில் முத்தூரில் வலதுபுறம் திரும்பி டி. நல்லிகவுன்டன்பாளையம் வழியாக சி.கோபாலபுரம் சென்று வடக்கிபாளையம் சாலையை அடைந்து வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை செல்ல வேண்டும்.

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி நெகமம் ரோட்டில் கக்கடவு வழியாக நெகமம் நால் ரோடு வந்து பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம் திப்பம்பட்டி வழியாக செல்ல வேண்டும். மேலும், ஆனைமலை பாலக்காடு திருச்சூர் செல்லும் வாகனங்கள் நெகமம் ரோட்டில் நேராக புளியம்பட்டி தேர்நிலை வந்து பாலக்காடு சாலையில் செல்ல வேண்டும்.

அவிநாசி ரோடு: கேரளாவிலிருந்து வாளையார் வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும். அவிநாசியிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும். திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள் காரணம்பேட்டை சந்திப்பு வழியே அனுப்பப்படும்

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம் பிவிஎன் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தொப்பம்பட்டி வந்து நெகமம் ரோட்டில் பொள்ளாச்சி அடைய வேண்டும்.

கம்பெனி: பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் வடக்கிபாளையம் பிரிவில் இடதுபுறம் திரும்பி வடக்கிபாளையம் ரோட்டில் வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை ரோட்டை அடைந்து கோவை செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆச்சிபட்டி பகுதியில் பேருந்துகள் செல்லும் பாதைகளும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+