அண்ணாமலை போட்டியிடும் சட்டசபை தொகுதி எது? கோவையில் 3 தொகுதியை குறிவைக்கும் பாஜக.. முக்கிய தகவல்
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக கோவையில் 3 சட்டசபை தொகுதிகளை குறிவைத்துள்ளதாகவும், அண்ணாமலையையும் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இருகட்சிகளும் தற்போது கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாமகவின் அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டணியில் கைகோர்த்துள்ளார்.

இன்னும் கூட்டணியில் வேறு சில கட்சிகளை கொண்டு வர தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையே இன்னும் தொகுதி பங்கீட்டு முடிவாகவில்லை. இருப்பினும் தொகுதி பங்கீடு பற்றி தலைவர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமித்ஷாவை திருச்சியில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதன்பிறகு டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சமயத்தில் கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தான் பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நிதின் நபின் தமிழகம் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் கோவை வந்தார். கோவையில் நேற்று மையக்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பிற தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது வரும் சட்டசபை தேர்தலில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு , சூலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கோவையில் 3 சட்டசபை தொகுதிகளில் களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட 4 ல் 3யை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்ணாமலையை பொறுத்தவரை சட்டசபை தொகுதியில் போட்டியிட ஆர்வம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாமலைக்கு பாஜக மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதால் அவரை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். இதனால் கோவையில் சிங்காநல்லூர் அல்லது கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணமாலை கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட அவரது மனைவி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அண்ணாமலைக்கு பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோவையில் நல்ல செல்வாக்கு உள்ளதோடு, அவர் சார்ந்த கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். இதனால் அண்ணாமலையை கோவை மாவட்டத்தில் களமிறக்குவது பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என பாஜக மேலிடம் நம்புகிறது.
மேலும் 4ல் தற்போது கோவை தெற்கில் பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் மீண்டும் அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு அதிமுக வழங்கலாம். மாறாக கோவை வடக்கில் அம்மன் கி அர்ஜூனன் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 என தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.
அதேபோல் கிணத்துக்கடவில் அதிமுகவின் செ தாமோதரன் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1967 முதல் 13 சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் 4 முறை மட்டுமே திமுக வென்றது. மீதமுள்ள 9 தேர்தல்களில் அதிமுக தான் தொகுதியை கைப்பற்றியது. குறிப்பாக 2001, 2006, 2011ல் செ தாமோதரன் அதிமுக சார்பில் வென்றார் 2016ல் சண்முகமும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் செ தாமோதனும் வெற்றி பெற்றார்.
மேலும் சிங்காநல்லூரில் அதிமுகவின் கேஆர் ஜெயராம் உள்ளிட்டவர்கள் எம்எல்ஏவாக உள்ளனர். இந்த தொகுதியிலும் அதிமுக செல்வாக்குடன் உள்ளது. 2006, 2011ல் அதிமுகவின் சின்னச்சாமி வென்றார். பிறகு 2016ல் கார்த்திக் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக வசமானது. அந்த தேர்தலில் கேஆர் ஜெயராம் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.
இதனால் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியை தவிர்த்து கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக செல்வாக்குடன் உள்ளது. இதனால் அந்த தொகுதிகளை அதிமுக, பாஜகவுக்கு விட்டுக்கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பாஜகவின் இந்த திட்டத்துக்கு அதிமுக செவிசாய்க்குமா? என்பதை அறிய நாம் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications