காலில் விழுந்து வோட்டு கேளுங்கள்.. தாமரையை மலர வையுங்கள்.. பாஜக அண்ணாமலை
கோவை: வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கள் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை அதிமுகவில் கூட்டணியில் இருந்து பாஜக சந்தித்தது. ஆனால் இந்த நதர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் தனித்து போட்டியிடுவதாக கடந்த திங்கள்கிழமை பாஜக அறிவித்தது.

கோவையில் வேட்பாளர்கள்
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் கோவையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

காலில் விழுந்து வாக்கு கேளுங்கள்
அவர் பேசுகையில் பாஜக வேட்பாளர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று சகோதர சகோதரிகள் போல பேசுங்கள். மக்களின் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள். கோவை தெற்கு தொகுதியில் அக்கா வானதி ஸ்ரீனிவாசன் தாமரையை மலர வைத்துள்ளார். தேர்தலில் அக்காவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

அறிமுகக் கூட்டம்
அது போல் சென்னை தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும். அடுத்த பதினொரு நாட்கள் போர்க்களம் போல் இருக்கும். போர்க்களத்தில் இருப்பது போல் முழு மூச்சாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன?












Click it and Unblock the Notifications