கொங்கில் பாஜக ஜீரோ.. ஜெயிக்கவே முடியாது.. பின்னணியில் பகீர் காரணம்.. அடித்து சொன்ன புள்ளி!
கோவை: கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட முறையில் கூட்டணி இல்லாமல் பாஜக ஜெயிக்க முடியாது. கன்னியாகுமரியில் ஒரு சில சட்டசபை தொகுதியில் பாஜக வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆனால் லோக்சபா தேர்தலில் எங்கும் தனியாக ஜெயிக்க பாஜகவிற்கு வாய்ப்பே இல்லை., என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக பல்வேறு தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 11 - 25 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று பல்வேறு தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த கணிப்புகள் சாத்தியமா.. பாஜக தனியாக அதிமுக இல்லாமல் லோக்சபாவில் இடங்களை வெல்ல முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பேட்டி அளித்துள்ளார்
அதில், மேற்கு மண்டலத்தில் கோவை குண்டுவெடிப்பிற்கு பின் தேர்தல் களம் மாறிவிட்டது. அங்கே களம் மாறிவிட்டதாக பாஜக நினைக்கிறது. அங்கே ஏற்கனவே சிபி ராதாகிருஷ்னன், மாஸ்டர் மதன் போன்றவர்கள் வென்றார்கள். ஆனால் அங்கே இப்போது பாஜகவிற்கு தனித்து ஜெயிக்கும் பலம் இல்லை, திருப்பூரை தாண்டி பாஜகவிற்கு பெரிய பலம் இல்லை.. கூட்டணி இல்லாமல் அவர்களால் வெற்றிபெற முடியாது.
அதிமுக உடன் கூட்டணி இருந்ததால் பாஜக அதிக இடங்களை வென்றது. கூட்டணி இல்லாமல் கொங்கு மண்டலத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. அண்ணாமலை சொல்லலாம். ஆனால் அதெல்லாம் பயன் அளிக்காது. மேற்கு மண்டலத்தில் கோவையை பாஜக அதிகம் குறி வைக்கிறது. பாஜக கட்சியின் மீதான தமிழ்நாடு மக்களின் அபிப்ராயம் எப்படி இருக்க வேண்டும், கோவையில் பாஜக உண்மையில் வலுவாக இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
மக்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்களாக என்று பார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கூட்டணி இல்லாமல் பாஜக ஜெயிக்க முடியாது. கன்னியாகுமரியில் ஒரு சில சட்டசபை தொகுதியில் பாஜக வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆனால் லோக்சபா தேர்தலில் எங்கும் தனியாக ஜெயிக்க பாஜகவிற்கு வாய்ப்பே இல்லை. திமுக, அதிமுகவிற்கு என்று பாரம்பரிய வாக்குகள் உள்ளன.
இந்த பாரம்பரிய வாக்குகளை பிரிக்க வாய்ப்பே இல்லை. பல மாவட்டங்களில் இருந்து இங்கே வந்து மக்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாரம்பரியமாக திமுக - அதிமுக பக்கம் செல்வார்கள். இவர்களுக்கு பாஜக என்ன செய்தது. மத்திய அரசு என்ன செய்தது என்று சொல்லுங்கள்.
அங்கே பணமும் பெரிய வேலை பார்க்காது. பணத்தை பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். கொரோனா, பணமதிப்பிழப்பு காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள். ஜிஎஸ்டி மூலம் இவர்கள் மிக கடுமையாக பாதித்துள்ளனர் . டிடிஎஸ் வாங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நிர்மலா சீதாராமன் என்ன செய்து இருக்கிறார்.
இப்படி ஒரு சூழலை வைத்துக்கொண்டு கொங்கு மண்டலத்தில் எப்படி ஜெயிக்க முடியும். அங்கே இப்போது பாஜகவிற்கு தனித்து ஜெயிக்கும் பலம் இல்லை, திருப்பூரை தாண்டி பாஜகவிற்கு பெரிய பலம் இல்லை.. கூட்டணி இல்லாமல் அவர்களால் வெற்றிபெற முடியாது.
அதிமுக உடன் கூட்டணி இருந்ததால் பாஜக அதிக இடங்களை வென்றது. கூட்டணி இல்லாமல் கொங்கு மண்டலத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. , என்று அய்யநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications