Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் பாஜக முக்கிய தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் பிளாஷ்பேக் இதோ.

2021 சட்டமன்ற தேர்தல்

ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அவரின் சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் இளங்கோ போட்டியிட்டார். கரூர் திமுகவில் செந்தில் பாலாஜி இருந்ததால் பிரச்சாரத்திலேயே அனல் பறந்தது.

bjp-candidates-list-2026-assembly-election-bjp-candidates-announced-here-is-bjp-s-flash-back-on-2021

ஆனால் அந்த தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை. இளங்கோ 93,369 வாக்குகளை பெற, அண்ணாமலை 68,553 வாக்குகளை மட்டுமே பெற்று சுமார் 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன் பிறகு அண்ணாமலை கோவை மாவட்டத்தில் கவனம் செலுத்தினார். அவரின் மனைவி அகிலாவின் சொந்த ஊர் கோவை என்பதால் மாமனார் வீட்டில் தங்கினார்.

2ஆம் இடம் பிடித்த பாஜக

பிறகு காளப்பட்டி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மும்முனை போட்டியால் அந்த தேர்தலிலும் போட்டி அனல் பறந்தது. ராஜ்குமார் 5,68,200 வாக்குகளும், அண்ணாமலை 4,50,132 வாக்குகளும் பெற்றனர். 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியடைந்தார்.

கோவையை தங்களின் கோட்டையாக வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்ததை பெரிய சாதனையாக கொண்டாடினார்கள் பாஜகவினர். ஆனால் அடுத்தடுத்து தோல்விகளால் அண்ணாமலையிடம் இருந்த மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது. முக்கியத்துவம் வழங்கப்படாததால் அவர் தேர்தலில் போட்டியிடும் மன நிலையில் அவர் இல்லை. அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

மூன்றாம் இடம் பிடித்த வானதி

2011 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் முதல்முறையாக சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 6,911 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகள் பெற்று மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் வெற்றி பெற, காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் இரண்டாவது முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டனர். இந்த கடுமையான மும்முனை போட்டியில் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், கமல்ஹாசன் 51,489 வாக்குகளும் பெற்றனர். வானதி 1728 வாக்குகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றார்.

கோவை வடக்கு வானதிக்கு..

வானதி சீனிவாசனை போல மொடக்குறிச்சியில் சரஸ்வதி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் காந்தி ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். 2026 தேர்தலில் வானதி தொகுதி மாறுவதாக தகவல் வெளியானது. வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முயற்சியை மேற்கொண்டு வந்தார். அண்ணாமலைக்கு, வானதி சீனிவாசனுக்கா என்ற போட்டி நிலவி வந்த நிலையில், இதில் வானதி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எல். முருகன் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டார். கயல்விழி 89,986 வாக்குகளும், முருகன் 88,593 வாக்குகளும் பெற்றனர். முருகன் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முருகன், திமுக ஆ. ராசாவிடம் 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2026 தேர்தலில் அவர் அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+