3 வருடத்தில் 100% உயர்ந்த மனைவியின் அசையா சொத்துக்கள்.. அண்ணாமலையின் சொத்து மதிப்பு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

BJP Chief Annamalai asset details and his wife bank balance details

கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாய் உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். அதே சமயம் தன்னிடம் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மனைவி அகிலாவிடம் அசையும் சொத்துக்களாக 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் உள்ளது என்று கூறி உள்ளார். 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹோண்டா சிட்டி கார் உள்ளது. இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்று கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி: முன்னதாக 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் காட்டப்பட்ட சொத்து மதிப்பு இதை விட அதிகம் இருந்தது. அதில் அவர் தன்னுடைய அசையும் சொத்தின் மொத்த மதிப்பு 46 லட்சம் ரூபாய் என்று கூறி இருந்தார். அதை விட இப்போது 10 லட்சம் குறைவாக அசையும் சொத்து உள்ளது.

தன்னுடைய மனைவியின் அசையும் சொத்து மதிப்பு 94 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அனால் மனைவியின் அசையும் சொத்து மட்டும் 100% அதிகரித்து உள்ளது. 3 வருடங்களில் 100 சதவிகிதம் மனைவியின் அசையும் சொத்து அதிகரித்துள்ளது.

கடந்த முறை அசையா சொத்துக்களாக பூர்வீக நிலமாக 76 ஏக்கர் நிலம் உட்பட பல நிலங்களை பட்டியலிட்டு உள்ளார். 1 கோடி ரூபாய் மதிப்பிற்கு இவர் நிலங்களை பட்டியலிட்டுள்ளார். தன்னிடம் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அதே சமயம் இவரின் மனைவிக்கு 50 லட்சம் ரூபாயில் அசையா சொத்து உள்ளதாக கடந்த முறை கூறி இருந்தார். இந்த முறை 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.


சொத்து கிண்டல்: நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாங்க 2002-ல் கோவைக்கு வந்தப்ப.. அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) ஒரு எம்.எல்.ஏ. அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர் சிங்கை ராமச்சந்திரன். இதுதான் வாரிசு அரசியல். ஆனால் 2002-ல் முதன் முதலாக நான் கோவைக்கு எதுவும் இல்லாமல் வந்தேன்.

எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்னைக்கு எனக்கு வயது 17. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம்.

பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன்., என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

விமர்சனம்: எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் அவரின் சொத்து கணக்கை வைத்து திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+