வெளியே தான் விவாகரத்து.. அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது - தயாநிதி மாறன் தாக்கு!
கோவை: வெளியில் பார்ப்பதற்குத்தான் விவாகரத்து. ஆனால் ரகசிய உறவில் பாஜக அதிமுக தொடர்கிறது என திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட திமுக சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழாவில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய தயாநிதி மாறன், "அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை சிறையில் வைத்துள்ளனர். கொங்குநாட்டு மக்கள் செந்தில் பாலாஜிக்கு நன்றி கடன்பட்டவர்கள். அவர் சிறையில் இருந்தாலும் அவருக்கு வெற்றியை காணிக்கையாக தருவார்கள்.
இதுநாள் வரைக்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வாயை திறந்தார்களா ஒரு கேள்வி கேட்டார்களா? ஆனால், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் 240 கேள்விகளை கேட்டுள்ளார். திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றம் சென்றவுடன் தமிழ்நாட்டுக்காக அவ்வளவு கேள்விகளை கேட்டுள்ளோம். திமுக நாடாளுமன்றத்திற்குச் சென்றவுடன் தலைகீழாக மாறிவிட்டது.
நாம் கட்டும் வரிப் பணத்தை நமக்கு முழுமையாக மத்திய அரசு கொடுப்பதில்லை. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா திருப்பிக் கொடுக்கிறது. பாஜக தமிழ்நாட்டுக்கு எதிரானது. அதற்கு துணை போனது அதிமுக.
செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள். ஆனால், கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும், எடப்பாடி பழனிசாமி மீதும், எஸ்பி வேலுமணி மீதும் ஏன் இன்னும் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை. அவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்படியே நடியுங்கள் என, இரு கட்சிகளிடையே ரகசிய கூட்டணி தொடர்கிறது. வெளியில் பார்ப்பதற்கு விவாகரத்து செய்து கொண்டோம். ஆனால் ரகசிய உறவில் தொடர்வோம். இது தான் பாஜக அதிமுக" என தயாநிதி மாறன் விமர்சித்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications