Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சாமிர்தம்.. நீதிமன்ற உத்தரவுப்படி சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்த பாஜக பிரமுகர் செல்வகுமார்

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமூக வலைதளத்தில் பாஜக பிரமுகர் செல்வகுமார் வருத்தம் தெரிவித்தார். பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக கருத்துகளை வெளியிட்ட புகாரில், பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கோவை பாஜக நிர்வாகி செல்வகுமார் தகவல்களை வெளியிட்டார். இதனை திட்டவட்டமாக மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக கூறியது.

palani panjamirtham bjp

இது தொடர்பாக சமூக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது. புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து கைது நடவடிக்கை எடுப்பதற்குள் உயர்நீதிமன்றத்தில் செல்வக்குமார் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி , பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய வழக்கில் நிபந்தனைகளுடன் பாஜக செல்வகுமாருக்கு முன்ஜாமீன் வழங்கப்பகிறது என்று உத்தரவிட்டார். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அத்துடன், உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்ட கருத்து என்று சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செல்வகுமார் நடந்தால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.

மேலும் பாஜக பிரமுகர் செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமூக வலைதளத்தில் பாஜக பிரமுகர் செல்வகுமார் வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகி செல்வகுமார் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில தினங்கள் முன்பு திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்னி கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்படம் செய்யபட்டதாக ஆதாரத்துடன் வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அந்த நெய்யை அனுப்பியது திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் என்பதையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தமிழக அரசால் பழனி முருகன் திருக்கோவில் அறங்காவலராக இரண்டு ஆண்டுகள் முன்பு நியமிக்கபட்டவர் என்பதையும் அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.தமிழக அரசால் நியமிக்கபட்ட அதிகாரமிக்க ஐந்து அறங்காவலர்களில் ஒருவராக இருப்பதால், பழனி திருக்கோவிலுக்கும் அதே நிறுவனம் நெய் வழங்கி இருக்கலாம் என்ற கருத்தை மட்டுமே இந்துசமய அறநிலையதுறை இணையதள ஆதாரத்துடன் பதிவு செய்திருந்தேன்.

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டு கொழுப்போ மற்ற மிருக கொழுப்போ கலந்திருக்கிறது என நான் எந்த இடத்திலும் பதிவு செய்யாத நிலையில், நம்முடைய பதிவு அவ்வாறு சொல்வதாக திரித்து அரசியல் உள்நோக்கத்துடன் எதிரிகளால் பரப்பப்பட்டது. இதனால் பழனி முருகபக்தர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருத்தப்படுகிறேன், என்னுடைய குடும்பமே பழனி முருகனின் அடிமைகள்தான், ஒருபோதும் என்னப்பன் முருகனின் பிரசாதத்தை பற்றி குறை சொல்லும் துணிச்சலோ எண்ணமோ எனக்கு கிடையாது.

கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் பழனி முருகன் திருக்கோவிலை நிர்வகிக்க தமிழக அரசு நியமித்த அறங்காவலர்களின் யோக்கியதை பற்றி தமிழக மக்களுக்கு தெரிய படுத்துவது மட்டுமே நோக்கம் என்பதை மிக்க பணிவுடன் தெளிவுபடுத்தி கொள்கிறேன். மாண்புமிகு மதுரை உயர்நீதி மன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறி்த்து வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுப்போம்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+