கோவை அருகே பெரியார் சிலையை அவமதித்த விவகாரம்: பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு ‘காப்பு’ மாட்டிய போலீசார்!
கோவை: கோவை மாவட்டம் வடசித்தூர் அருகே பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கிணத்துக்கடவை அடுத்த வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. அங்கு உள்ள பெரியார் சிலை கம்பி வேலிக்குள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில், அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதித்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் வலியுறுத்தி இருந்தனர்.
வடசித்தூரில் பெரியார் சிலை சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்ட நிலையில், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என நேற்று மாலை வடசித்தூரில் அனைத்து ஜனநாயக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications