நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது

பாஜக நிர்வாகி கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை எஸ்பி பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை எஸ்.பி பரிந்துரை செய்ததன் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கல்யாணராமன், இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசினார்.

BJP Kalyana Raman arrested arrested under goondas act

இதை கண்டித்து, அந்த நிகழ்ச்சியின் போதே இஸ்லாமியர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு மதத்தினரை இழிவு படுத்தும் நோக்கில் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கல்யாணராமன் மீது குவிந்த தொடர் புகார்களால் அவரை கைது செய்த காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை எஸ்பி பரிந்துரை செய்ததன் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+