முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட் ரெடியாம்.. விரைவில் வெளியிட பாஜக பிளான்.. பிஎல் சந்தோஷ் கொடுத்த ஹிண்ட்!
கோவை: விரைவில் தமிழகத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பி.எல்.சந்தோஷ் இதுகுறித்துப் பேசியுள்ளாராம்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் துவங்கியுள்ளன. பாஜகவை வீழ்த்த வேண்டும் எனப் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி கடந்த தேர்தலைப் போலவே வலுவாக உள்ளது.

அதேசமயம், மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை அமைக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்த அ.தி.மு.க வெளியேறியுள்ளது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ், மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் சென்னை வந்த பி.எல். சந்தோஷ், நேற்று காலை கோவைக்குச் சென்றார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் தமிழக பாஜகவின் நாடாளுமன்றத் தொகுதிகள் சார்ந்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் பிஎல் சந்தோஷ். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பாஜக நிர்வாகிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்கள், கூட்டணி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எனப் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆழமாக விவாதித்துள்ளார் சந்தோஷ்.
அதைதொடர்ந்து, பல்வேறு முக்கிய விஷயங்களை, கட்சியினரிடம் தெரிவித்துள்ளார் பி.எல்.சந்தோஷ். வாக்கு சதவீதத்தை வெகுவாக உயர்த்த வேண்டும், அதை நோக்கி உழைக்க வேண்டும், பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு எழுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது, அதை எல்லாம் உறுதியான ஓட்டுகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என பாஜகவினரை கேட்டுக் கொண்டுள்ளார் பி.எல்.சந்தோஷ்.
மேலும், இந்த மாத இறுதிக்குள், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதில் தமிழ்நாட்டின் பல தொகுதிகளின் லிஸ்ட்டும் இருக்கும். பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. எனவே, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்துங்கள் என பி.எல்.சந்தோஷ், கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான்












Click it and Unblock the Notifications