திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வானதி சீனிவாசன்.. என்னாச்சு? அவரே வெளியிட்ட தகவல்!
கோவை: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை பற்றி அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தேசிய மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் பாஜக மகிளா மோர்ச்சா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 5 மாநில தேர்தலையொட்டி, கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அவ்வப்போது டெல்லிக்கு சென்று கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார் வானதி சீனிவாசன். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் அவரது உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாஜக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications