புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு வானதி சீனிவாசன் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? அசந்துருவீங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அரசு மருத்துவமனையில் ஆய்வுக் சென்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு நரேந்திரன் என பெயர் சூட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குழந்தைக்கு வானதி சீனிவாசன் பெயர் சூட்டியது கவனம் பெற்றது.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் என முக்கிய பொறுப்பிலும் வானதி சீனிவாசன் இருக்கிறார். பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக இருக்கும் இவர் தொலைக்காட்சி பேட்டிகளிலும் சரி...நேர்காணலின் போதும் சரி..பிரதமர் மோடியை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.

BJP MLA Vanathi Srinivasan name New born baby ko Narendran at Coimbatore

அண்மையில் கூட மகளிர் இட ஒதுகீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை வரவேற்ற வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வானதி சீனிவாசன் ஆசீர்வாதம் பெற முயன்றார். இதைக் கவனித்த பிரதமர் மோடி சட்டென பின்னால் நகர்ந்தார். மேலும் பிரதமர் மோடி, வானதி சீனிவாசனுக்கு அறிவுரையும் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்வு குறித்து பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், மசோதா நிறைவேறியதால் மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நேற்று காலை தான் முடிவு செய்தோம்.

இன்று அதற்கான வரவேற்புகளை செய்து உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தோம். மகளிர் அணி தலைவர் என்ற முறையில் நான் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக இருந்தேன். பிரதமரை வரவேற்று விட்டு.. நான் அவரிடம் சொன்னது.. கோடிக்கணக்கான பெண்களின் கனவை நீங்கள் நனவாக்கியிருக்கீர்கள். அவர்கள் எல்லாருடைய சார்பிலும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கப்புறம் எனக்கு என்ன தோன்றியது என்றால் அரசியலில் இருக்கக் கூடிய பெண்கள் ஒவ்வொரு இடத்திற்கும் வருவதற்கு சந்திக்கின்ற சவால்கள், பிரச்சினைகள், அனுபவிக்கின்ற அவமானங்கள் எல்லாம் அந்த கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு நிமிடம் வந்தது. எனவே, அவருக்கு காலில் விழுந்து நன்றி சொல்வதன் மூலமாக மட்டுமே நன்றி சொல்ல முடியும் அப்டி நினைத்து நமஸ்காரம் பண்ணினேன். அப்போ உடனே மோடி, இனிமேல் இப்படி விழக்கூடாது. உங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். காலில் விழக்கூடாது. அப்டினு சொல்லிவிட்டு எனக்கு அறிவுரை சொன்னார்" என்றார்.

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வானதி சீனிவாசன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தையை பார்த்தார். குழந்தையின் பெற்றோர் பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, குழந்தைக்கு நரேந்திரன் என்று பெயர் வைத்தார். அதோடு குழந்தையின் காதில் நரேந்திரன் என்று மூன்று முறை சொல்லிவிட்டு நகர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+