கோவிலை இடிச்சுட்டுதானே பாபர் மசூதி கட்டுனாங்க.. ஜல்லிக்கட்டு சனாதனத்தின் அடையாளம்- வானதி சீனிவாசன்
கோவை: அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியே கட்டப்பட்டது எனக் கூறிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். மேலும் சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியலாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளன.

சென்னையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயோத்தி
ராமர் கோயில் திறப்பதற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார்.
கோவிலை இடித்துவிட்டு மசூதி: இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதானே பாபர் மசூதியே கட்டப்பட்டது. உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் திமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்றார்.
சனாதனத்தின் ஒரு பகுதி: மேலும் ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கோவிலில் இருந்து பிரிக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் கருத்து: முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சனாதன திருநாள் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டதை வரவேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். அதாவது "சங்க கால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அந்த கால மக்களின் வாழ்க்கையை இன்று வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது" என குறிப்பிட்டிருந்தார் நிர்மலா சீதாராமன்.
சு.வெங்கடேசன் பதிலடி: இதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என பதில் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications