கொங்கு நாடு தேவை உள்ளது.. அரசின் செயல்பாடுகளை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு.. வானதி சீனிவாசன் பரபரப்பு
கோவை: கொங்கு மண்டல வளர்ச்சி என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கொங்கு மக்களின் தேவைகளை அரசு எந்தளவு நிறைவேற்றித் தருகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். மநீம தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தவர்.
தேர்தலுக்குப் பின்னரும், அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் வானதி சீனிவாசன், கொங்கு நாடு குறித்துப் பரபரப்பு கருத்து முன் வைத்துள்ளார்.

வானதி சீனிவாசன்
ஆடிட்டர் ரமேஷின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை தெற்கு எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தடுப்பூசி
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குகின்றன. இருப்பினும், அதனைச் சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்த ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். இதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேக்சின் இருப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு அட்டவணையாக அளித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்காகக் கோயில்கள்
இடிக்கப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாகக் கோயில்களை அழகுபடுத்தும் பணிகளை ஸ்மாட்ர் சிட்டி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்ய முடியாத இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகு, பணிகளைத் தொடர வேண்டும்.

கொங்கு நாடு
கொங்கு நாடு விவகாரத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. ஆனால் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி, தேவைகள் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களின் ஏக்கமாகவே உள்ளன. அதைப் புதிதாக மாநில அரசு உரிய முறையில் நிறைவேற்றித் தர வேண்டும். கொங்கு மக்களின் தேவைகளை அரசு எந்தளவு நிறைவேற்றித் தருகிறது என்பதைப் பொறுத்தே கொங்கு நாடு கோரிக்கை குறித்து அடுத்தகட்ட முடிவை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications