Annamalai: அண்ணாமலையை இப்படியா டம்மி பண்ணுவீங்க.. பொங்கிய ஆதரவாளர்.. கோவை பாஜக பஞ்சாயத்து
கோவை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் உள்கட்சி குத்துகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. பாஜகவில் ஏராளமான பஞ்சாயத்துகள் வெடித்து வருகிறது. கோவையில் எல். முருகன், அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்களை போஸ்டரில் சிறியதாக போடப்பட்டிருப்பதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர் [Annamalai supporters' anger].
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து, பாஜக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் காந்திபார்க் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் என்னவோ திமுகவை கண்டித்துதான். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் கோவை பாஜகவில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பில் அண்ணாமலை ஆதரவாளர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன், கஸ்தூரி ஆகியோரின் படங்கள் பெரிதாக போடப்பட்டன. மேலும் மாவட்ட தலைவர் உள்ளிட்ட கோவை பாஜக நிர்வாகிகளின் படங்களும் பெரிதாக போடப்பட்டது.
அண்ணாமலை சர்ச்சை
ஆனால் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரின் படங்கள், அன்புமணி டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களை விட மிகவும் சிறியதாக ஒட்டப்பட்டது. இது அண்ணாமலை ஆதரவாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் அவரின் ஆதரவாளர் ஒருவர் கோவை பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை பாஜக பஞ்சாயத்து
இதுகுறித்து கோவை மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வணக்கம், பெண்கள் பதுகாப்புக்காக பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணமாக வேல் யாத்திரை மற்றும் என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தி பட்டி தொட்டிகள் எங்கும் பாஜகவை கொண்டு சென்ற முன்னாள் மாநில தலைவர் தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை படங்களை இதை விட யாரலும் சுருக்க இயலாது" என்று கூறியுள்ளார்.
சுவரொட்டி பிரச்சனை
கூட்டணி கட்சிகள் கூட இப்படி செய்யவில்லை. மாவட்ட நிர்வாகிகள் படங்களை பெரிதாக போட தெரிந்துள்ளனர். யாரின் தூண்டுதல்களால் இவ்வாறு சுவரொட்டியில் வடிவமைப்பு செய்தார்கள் என்று எல்.முருகன் மற்றும் அண்ணாமலை கணக்குகளை டேக் செய்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications