"மொதல்ல 'வீரராக' ரஜினி களம் வரட்டும்.. பிறகு 'கேப்டன்' யார்னு பார்த்துக்கலாம்.. வானதி அதிரடி

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து வானதி கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கோவை: "அதிகாரத்திற்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கினால் அதை நாங்கள் வரவேற்கின்றோம்.. விரைவில் அவர் வரட்டும்.. அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும்.. வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும்" என்று பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய ஆபீசில் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிமை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் யாத்திரைக்கு ஆதரவு கோரினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாசனதி சொன்னதாவது: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்திருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.. பாஜக கட்சி அமைப்பு விதிமுறைகளை மீறி கூடுதலாக துணைதலைவர் பதவி அவருக்கு கொடுக்கப்படவில்லை.

 விதி விலக்கு

விதி விலக்கு

சில நேரங்களில் பாஜக அமைப்பு விஷயங்களில் விதி விலக்குகள் உண்டு.. அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி விதி விலக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.. அமைப்பு விதிகளை மாற்றம் செய்து கொள்வது குறித்து தலைவர் முடிவு செய்து கொள்ளலாம்.. இதில் ஒன்றும் தவறில்லை.

 மனமகிழ்ச்சி

மனமகிழ்ச்சி

பாஜக கட்சி உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக பதவி ஏற்ற வரலாறு உண்டு.. சுரேஷ்பிரபு, ஜெய்சங்கர் போன்றவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.. அண்ணாமலையின் வரவு பாஜகவிற்கு கூடுதல் பலம்.. திறந்த மனதோடும், மனமகிழ்வோடு பாஜக குடும்பத்திற்கு வரவேற்று இருக்கின்றோம்.. அவருக்கு பணிகள் விரைவில் ஒதுக்கப்படும்.

 புதியவர்கள்

புதியவர்கள்

பாஜக கட்சியில் பல வருடமாக கட்சிக்கு உழைத்துக்கொண்டு இருந்தாலும் திறமைகளுடன் புதிதாக வருபவர்களுக்கும் கட்சி அங்கீகாரம் கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடமும், புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எல்லா துணை தலைவர்களுக்கும் தனி தனியாக பணிகள் இருக்கும். புதியதாக யாராவது வந்தால் அதிகாரம் போய் விட்டது என யாரும் நினைக்க வேண்டியதில்லை.. அவர் அவரவர்களின் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

 கட்சிக்காரர்கள்

கட்சிக்காரர்கள்

கட்சியில் சில மாற்றங்கள் வரலாம்.. துணைதலைவர்களுக்கு வேறு பதவிகள் கொடுக்கப்படலாம்.. அமைப்பு விதிமுறை மீறப்பட்டு இருப்பது குறித்து கட்சிகாரங்கள் தான் கவலைப்பட வேண்டும். இங்கு கட்சிகாரர்கள் யாரும் இது குறித்து பேசவில்லை.. வெளியில் இருப்பவர்கள் தான் கவலைப்படுகின்றனர்" என்றார்.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது பற்றி கேட்டதற்கு, "அதிகாரத்திற்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கினால் அதை தாங்கள் வரவேற்கின்றோம்.. விரைவில் அவர் வரட்டும்.. அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும்.. வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும்" என்றார் வானதி சீனிவாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+