சீமானை பார்த்ததுமே கட்டியணைத்த அண்ணாமலை.. நெகிழ வைத்த கோவை.. 2 பேருக்கும் எவ்வளவு பாசம் பாருங்க
கோவை: கோவையில் நடந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்ததும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைக்குலுக்கி ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. தமிழக அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக பயணிக்கும் நிலையில் இந்த சம்பவம் இரு கட்சியினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர்கள் 2 பேரும் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பயணித்து வருகின்றனர். மேலும் பொதுமேடைகளில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பாஜக, நாம் தமிழர் என இரு கட்சிகளின் கொள்கைகள் ரீதியாக அண்ணாமலை, சீமானையும், சீமான் அண்ணாமலையையும் விமர்சித்து வருவதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனாலும் கூட இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அண்ணாமலை, சீமானை விமர்சனம் செய்யும்போதெல்லாம் அண்ணன் என்ற வார்த்தையை பயன்படுத்துவார். அதேபோல் சீமானும், அண்ணாமலையை விமர்சிக்கும் போதெல்லாம் தம்பி அண்ணாமலை என்ற வார்த்தையை பயன்படுத்துவார்.
இத்தகைய சூழலில் தான் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென்று ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. அதாவது கோவை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேலு வாழ்க்கை குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்பட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் தான் சீமானை பார்த்ததும் அண்ணாமலை அவரை நோக்கி நடந்து வந்தார். அண்ணாமலை வருவதை அறிந்த சீமான் சிரித்தபடி எழுந்து நின்றார். அருகே வந்த அண்ணாமலை புன்சிரிப்புடன் சீமானிடம் கைக்குலுக்கினார். அதன்பிறகு அவர் சீமானை கட்டியணைத்து ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
பதிலுக்கு சீமானும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் அமர்ந்தனர். இந்நிலையில் தான் சீமான் - அண்ணாமலை ஆகியோர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்ளும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications