கொங்கு மண்டலத்தில் பாஜகவின் புது பார்முலா.. உஷாரான எடப்பாடி.. அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்
கோவை : கொங்கு மண்டலத்தை மட்டுமல்ல.. கொங்கு மண்டல அதிமுக தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலும் தீவிரமாக பாஜக செயல்படுவதால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
பாஜக அதிமுக உடன் கூட்டணியில் இருந்த வரை அமைதியாக இருந்த அண்ணாமலை, அதிரடியாக செயல்களில் இறங்கி உள்ளார். அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பலரை தங்கள் கட்சியில் இணைத்தார். அடுத்தகட்டமாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியை பாஜகவில் இணைத்தார்.

இதை எல்லாவற்றையும் விட நேற்று நடந்த அரசியல் மாற்றங்கள், கருத்துக்கணிப்புகள் அதிமுகவை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.. கோவை அவினாசி சாலையில் உள்ள ஓட்டலில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த மாற்றுக்கட்சி என்பது அதிமுக என்றும், அதிமுகவின் முக்கிய தலைகள் பாஜகவில் இணையப்போவதாகவும் தகவல்கள் பரவின. இது ஒருபுறம் எனில் கருத்துக்கணிப்பு ஒன்றில் அதிமுக பாஜகவை விட குறைவான வாக்குசதவீதம் தான் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களை கவனித்த அதிமுக தலைமை, திமுகவைவிட தங்களைத்தான் பாஜக குறிவைத்திருப்பதை உணர்ந்தது. இதையடுத்து அதிரடியாக எதிர்வினையில் இறங்கி உள்ளது. அதிமுகவிற்கு எப்படிப்பட்ட வாக்கு வங்கி என்றால், திமுகவை விரும்பாதவர்கள் அதிமுவை விரும்புவார்கள். இந்த வாக்குகளை எல்லாம் மொத்தமாக மாற்ற விரும்பிய பாஜக, கடந்த இரண்டு வருடங்களில் கிளை மட்ட அளவில் நிர்வாகிகளை அதிகரிக்க முயன்றது. மறுபக்கம் திமுக, பாஜக உடன் கூட்டணி வைத்திருந்ததை காரணம் காட்டி அதிமுகவையே கடுமையாக தாக்கி வந்தது . இரண்டு பக்கமும் தாக்குதலுக்கு உள்ளான அதிமுக, ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைக்க காரணமாக இருந்தது கொங்கு மண்டலம் தான். ஆனால் பாஜகவின் நடவடிக்கைகள் எல்லாமே கொங்கு மண்டலத்தை குறிவைத்து தான் இருந்தது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக உச்சகட்டமாக இறங்கி உள்ளது. பாஜக உடன் கூட்டணியில் இதுவரை சேர்ந்த கட்சி என்றால் அது ஜிகே வாசனின் தாமாக மட்டுமே. இந்த கட்சி கடந்த முறை 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே வாங்கி இருந்தது. தேமுதிக, பாமக அதிமுக பக்கம் போகவே அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக மாற்றுக்கட்சியினர் பலரை தங்கள் கட்சியில் இணைக்க களம் இறங்கி உள்ளது.
இதில் உச்சகட்டமாக கொங்குமண்டல அதிமுக தலைகளை பாஜக குறிவைத்திருப்பதாக வெளியான செய்திகளால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி, உஷார் ஆனார். தற்போது அதிமுக தலைமை பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதேபோல் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு கருத்துக்கணிப்பு ஒன்று வெளியான நிலையில், அந்த கணிப்பை அரசியல் திணிப்பாக பார்க்கும் நேற்று முன்தினம் முதல் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.
கோவையில் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அவிநாசி சாலை அனைவருக்கும் பொதுவான சாலைதானே? அவர்கள் அந்நேரத்தில் அங்கே இருப்பார்கள் என்று எனக்கு என்ன தெரியும்? பா.ஜ.க. நிகழ்ச்சி நடந்ததற்கு எதிர்புறம் இருக்கும் வீடு எனது நண்பர் வீடு. எனது நண்பர் வீட்டில் இருந்துதான் வந்தேன்.
பா.ஜ.க.வில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் இன்று அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர். அவர்கள் கொங்கு மண்டலம் அல்லது தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறி அதிரவைத்தார். ஆனால் இதுவரை பாஜக எம்எல்ஏக்கள் யார் என்பது தெரியவில்லை.. அதேநேரம் பாஜகவில் இருந்து அப்படி யாரும் போக வாய்ப்பு இல்லை என்றும், கோபத்தில் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏ அப்படி பேசுகிறார் என்றும் பாஜகவினர் கூறுகிறார்கள்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசும் போது, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்தும் என்று அதிரடியாக கூறினார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக பாஜக இடையே மோதல் இனிமேல் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன?












Click it and Unblock the Notifications