Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆளுநர் ரவியே திரும்பிப் போ”.. கோவை வந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி.. 39 பேர் கைது! பரபர!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகையில் ஏந்தி, ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், கோவை வரும் ஆளுநருக்கு எதிராக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

black flag protest against governor rn ravi in coimbatore today

கு.இராமகிருட்டிணன், கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான மசோதாக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான மசோதாக்கள் இவற்றையெல்லாம் அனுமதிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவதோடு மட்டுமல்லாமல் இவற்றையெல்லாம் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராகவும் பேச துவங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாக்களுக்கும் அவர் அனுமதி வழங்குவதில்லை. தற்போது தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் மாநில அரசு வகுத்திருக்கக்கூடிய கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் இயற்கை வேண்டிய அவசியம் இல்லை என வெளிப்படையாக பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கல்விக் கொள்கையை கூட வகுக்க முடியாத நிலைக்கு ஆளுநர் தள்ளுகிறார். அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுவிற்கு யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க முடியாது என்ற நிலையில் தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் ஆளுநர் வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆளுநர் தடையாக இருக்கிறார்.

இந்நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டம் அளிப்பு விழாவிற்கு ஆளுநர் வந்தால் லாலி ரோடு பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாடு திராவிட இயக்கங்களால் அடைந்துள்ள வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை தடை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு ஆளுநர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

black flag protest against governor rn ravi in coimbatore today

ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் போலவும் மாநில தலைவர் போலவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் திட்டங்களையும் நோக்கங்களையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதும் பாஜகவை இங்கு வளர்ப்பதற்காகவும் தான் மக்கள் பணத்தில் உருவாகிய ராஜ் பவனில் அமர்ந்து கொண்டு பாஜகவில் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்திருந்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்ததை அடுத்து ஆளுநருக்கு இயல்பான பாதுகாப்பை விட அதிகமாக வழங்க காவல்துறை முடிவு செய்தது. இதனையடுத்து, கோவையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வருகை தந்த ஆளுநருக்கு எதிராக, அவர் வருவதற்கு முன்பே மருதமலை சாலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் சுமார் 50 பேர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், விமான தாமதம் காரணமாக ஆளுநர் தாமதமாக வந்தார்.

"தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர் ரவியே திரும்பி போ" என்ற வாசகம் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஆளுநர் வருகையின்போது கறுப்புக்கொடி காட்ட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

black flag protest against governor rn ravi in coimbatore today

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதிதமிழர் பேரவை, திராவிடர் தமிழர் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர். ஆளுநர் வருகையின்போது நடந்த கருப்புக்கொடி போராட்டம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கியுள்ளார் ஆளுநர் ரவி. இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றார். முன்னதாக, சென்னையில் இருந்து ஆளுநர் கிளம்பிய விமானத்தின் விமானிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், மாற்று விமானி வரவழைக்கப்பட்டு விமானம் புறப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+