கோவையில் நில மோசடி புகாரில் சமரசம் செய்ய லஞ்சம்? முன்னாள் உதவி ஆணையர் மீது பாய்ந்த வழக்கு
கோவை: ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் நில மோசடி புகாரில் சமரசம் செய்து, அவர்கள் இழந்த முன்பணத்தை மீட்டுத் தருவதற்காக ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்றதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் மற்றும் இடைத்தரகர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க முயன்றால் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வைக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் இருக்கிறது. அதேநேரம் லஞ்சம் வாங்கியிருந்தாலும், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்றால் அந்த அதிகாரி மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய வைக்க முடியும். நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை.. நேராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தாலே நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். கோவையில் அப்படித்தான் ஒரு உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான நாகராஜன் மற்றும் நூருல்லா ஆகியோர் நிலம் வாங்குவதற்காக வழங்கிய ரூ. 2.42 கோடி முன்பணத்தை விற்பனையாளர்கள் திருப்பித் தர மறுத்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அப்போதைய உதவி ஆணையர் குணசேகரன், எதிர் மனுதாரரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர 10 சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக பிரவீன் என்ற தனியார் நபரை இடைத்தரகராகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. முதற்கட்டமாக மீட்கப்பட்ட தொகையிலிருந்து தனக்காக ரூ. 5 லட்சமும், இடைத்தரகருக்கு கமிஷனாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் புகார் அளித்தனர்.. அந்த புகாரில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடைத்தரகர் மூலம் ரூ. 4.40 லட்சத்தை குணசேகரன் பெற்றுக்கொண்டதாகவும், இடைத்தரகர் தனது கமிஷன் தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்குப் பெற்றதாகவும் கூறினார். இதனை விசாரணையில் உறுதி செய்தார்கள்
இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குணசேகரன் மற்றும் பிரவீன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளது கோவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications