அதிகாலையிலேயே பரபரப்பு.. வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 40 பேர் காயம்
கோவை: திருப்பூரில் இருந்து கோவை மாவட்டம், வால்பாறைக்கு சென்ற அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு இன்று அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூர் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. இந்தப் பேருந்தை கணேஷ் (வயது 49) என்பவர் இயக்கி உள்ளார். நடத்துனர் சிவராஜ் உள்பட பேருந்தில் 72 பயணிகளை ஏற்றிக் கொண்டு வால்பாறை பகுதியில் பேருந்து சென்றுள்ளது.

அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் கணேசன் பலத்த காயமடைந்தார். கணேசனை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கை, கால், தலை போன்ற பல்வேறு இடங்களில் படுகாயங்கள் அடைந்த பயணிகளும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications