வேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட நந்தினி.. பதை பதைக்க வைக்கும் கடைசி நிமிடம்.. ஷாக் வீடியோ
இளம்பெண் மீது கார் மோதும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது
Recommended Video
திருப்பூர்: சாலையோரம் நடந்து போய் கொண்டிருந்த நந்தினியை, கார் ஒன்று மோதுவதும், அப்படியே அலேக்காக அவரை தூக்கி வீசப்படுவதும் வீடியோவாக வெளியாகி பதைபதைப்பை தந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி நந்தினி. 27 வயதாகிறது, இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், நந்தினி தனது வீட்டு பக்கத்தில் உள்ள பார்க் ஒன்றிற்கு குழந்தையை அழைத்து சென்று கொண்டிருந்தார்.

நந்தினி
அப்போது அந்த வழியாக படு ஸ்பீடாக வந்த கார், ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த நந்தினி மீது மோதியது. பிறகு அதே கார், நந்தினிக்கு முன்புறம் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீதும் மோதியது. கார் மோதிய வேகத்தில், நந்தினி தூக்கி வீசப்பட்டார்.

வீசப்பட்டார்
இதில், படுகாயமடைந்த நந்தினியின் தலை நொறுங்கியது. சாயங்கால நேரம் என்பதால், மக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. இதை பார்த்து பதறியஅடித்து கொண்டு வந்த அவர்கள், அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தனர்.

உடல் உறுப்புகள்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நந்தினி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து, நந்தினியின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக நந்தினியின் கணவர் அவினாசி ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாணையை மேற்கொண்டனர்.

அதிர்ச்சி
இப்போது, இந்த விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதில், வெள்ளை கலர் கார் படுவேகமாக வருவதும், நந்தினி மீது மோதியதும், அங்கிருந்தவர்கள் அலறி கொண்டு ஓடுவதும் அதில் தெரிகிறது. காண்போரை பதைபதைக்க செய்யும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications