திருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. சிபிஐ அதிகாரிகளிடம் புட்டுப் புட்டு வைத்த மக்கள்
திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
Recommended Video
கோவை: "ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே" என்று திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் அன்று கொதித்து போய் சொன்னார்கள். அவர்களிடம்தான் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும்போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.

வீட்டில் ரெய்டு
இந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான் என்பதால், கோவை சின்னியம்பாளையத்தில்தான் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமையிலான குழு அங்கு நேற்று மதியத்திலிருந்து சோதனை நடத்தியது.

சின்னப்பம்பாளையம்
இந்நிலையில், இன்று திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை. இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.

அதிர்ச்சி
இது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆவேச பேச்சு
இதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, "சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்கும். ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம். இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. காலங்காத்தாலே 7 மணிக்கே திருநாவுக்கரசு இங்க சுத்திட்டு இருப்பான்.. இன அவன் இந்த பக்கம் இனி வரட்டும்... நாங்க பார்த்துக்கறோம்" என்று ஏற்கனவே ஆவேசமாக சொல்லி இருந்தார்கள்.

பெண்கள்
இந்த நிலையில்தான் சிபிஐ அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சப்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா' என, அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.

கார்கள்
அதற்கு மக்கள், "கூலி வேலைக்கு போய்ட்டு, இரவில்தான் வீடு திரும்புவோம். யார் வந்தார்கள் என்பதை கண்காணிக்கவில்லை. பெண்கள் சப்தம் கேட்டதில்லை. ஆனா கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக்கிறோம்" என்றனர்.

தகவல்கள்
இனி திருநாவுக்கரசுவின் நடவடிக்கைகள் பற்றி மொத்த விவரத்தையும் அதிகாரிகளிடம் மக்கள் கொட்டி தீர்ப்பார்கள் என்றே தெரிகிறது. நேற்றும், இன்றும் திருநாவுக்கரசை சுற்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்தை நீட்டித்துள்ளதால், அதிர்ச்சி தகவல்கள் பல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications