Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2014 முதல் 2024 வரை..கோவை My v3 ads எப்படி எல்லாம் இயங்கியது தெரியுமா? திடுக்கிடும் தகவலால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: ரூ.1000 மதிப்புள்ள பொருட்களை 1.95 லட்சம் என்ற பெயரில் ஏமாற்றி தருவதாக கோவை My v3 ads நிறுவனம் மீது புகார் எழுந்த நிலையில், அந்த நிறுவனம் 2014 முதல் 2024 வரை எப்படி எல்லாம் வந்தது என்பது குறித்தும், அந்த நிறுவனம் எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பது குறித்தும் iRoBo_V3.0 என்ற நெட்டிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சக்தியானந்தன் என்பவர் கோவையில் My v3 Ads என்ற ஆப்பை நடத்தி வருவதுடன் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த My v3 Ads யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என சக்தியானந்தன் விளம்பரம் செய்துள்ளார்.

Check this latest Road map of Coimbatore MyV3Ads is here: netizen explain

இவர்களின் விளம்பரத்தில், 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பணம் செலுத்தும் நபர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படுகிறதாம். மேலும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படுகிறதாம். தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலத்தவரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வந்ததாக பணம் கட்டியவரகள் கூறி வருகிறார்கள்

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று குற்றச்சாட்டுகளை பலர் கூறி வருகிறார்கள். மேலும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக My v3 Ads நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டத. அந்த புகாரின் பேரில் My v3 Ads மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே My v3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கோவை நீலாம்பூர் பைப்பாஸ் சாலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். இதனால் அந்த பகுதியே ஸ்தம்பித்து போனது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கலைந்து போக செய்தனர். அதேநேரம் சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் My v3 Ads நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை My v3 Ads நிறுவனம் ரூ.1000 மதிப்புள்ள பொருட்களை 1.95 லட்சம் என்ற பெயரில் ஏமாற்றி தருவதாக iRoBo_V3.0 என்ற நெட்டிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் விளக்கியிருந்தார். அந்த பதிவில் அவர் கூறுகையில், "இந்த மாத்திரை எதுக்கு சாப்பிடுறது,ஏன் சாப்பிடுறதுனு தெரியல myv3adsல சேர்ந்தவுங்களுக்கு..! 40 boxம் குடுத்து 1.21L வாங்குறாங்க myv3adsல சேர..! வாங்கி 4 மாசமா வீட்ல வச்சிருக்கார்..! அட்டைய கூட பிரிக்கல..! வாங்கின ஆட்களும் யூஸ் பன்னல..! ஒரு box Rs.3900 போடுறாங்க.. அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது.. இதே ஆயிர்வேத கேப்ஸ்யூல் Rs.500குள்ள மார்கெட்ல கிடைக்குது..!
Money rotation க்காக வாங்குற பணத்தை கணக்கு காட்ட இந்தபொருள ஓவர் ப்ரைஸ்வச்சி அதுக்கு GST கட்டி ஏமாத்திட்டு இருக்காங்க..!


இதுல இருக்கதெல்லாம் பார்த்துட்டு என்னமோ ஹெவியா இருக்குனு நினைக்க வேண்டாம்.. நாட்டு மருத்துகடைல சல்லீசா கிடைக்ககூடிய பொருட்கள்தான்..

1. முருங்கை பிசின்
2. பூவரசம் பூ
3. தூதுவளை
4. கசகசா
5. நெல்லிக்காய்
6. அதிமதுரம்
7. ஆலம் விதை
8. அரச விதை
9. வட்டதுத்தி
10. ஓமம்
11. தான்றிக்காய்
12. நெருஞ்சி
13. தேத்தான் கொட்டை
14. நீர்முள்ளி
15. அமுக்கிரா
16. பாதாம்
17. ரோஜாப்பூ
18. ஜாதிக்காய்
19. கிராம்பு
20. பட்டை
21. வால் மிளகு
22. திப்பிலி
23. கரு மிளகு
24. ஏலக்காய்
25. உளுந்து
26.பிஸ்தா
27. ஒரிதழ் தாமரை
28. பூனைக்காலி
29. பேரீச்சம்பழம்

இதைதான் மாத்திரையா போட்டு ஒரு டப்பா 3900,40 டப்பா 1.21லட்சம்னு கணக்கு காட்டி ஏமாத்துறாங்க.. சந்தேகம் இருந்தா பக்கத்து நாட்டுமருந்து கடைல இந்த லிஸ்ட்ட காட்டி என்ன ரேட் வரும்னு கேளுங்க..!

விக்ஸ்ச V னு சுத்தி சுத்தி எழுதுற கதைதான்..! இதுல இருக்க மொத்த பொருளும் 100grams each வாங்கினா ரூ.1000குள்ளவருது..! (நாட்டு மருந்துகடைல இப்ப விசாரிச்சது) 3கிலோ பொருட்கள் வருது..! 6000 மாத்திரைகள் தயாரிக்கமுடியும்..! 60பாக்ஸ்க்கு தேவையான மாத்திரை..! மற்ற செலவுகள் எல்லாம் வச்சி கழிச்சகூட 50பாக்ஸ்கான மாத்திரைகள் கிடைக்கும்..! Myv3ads MRP படி 1.95L..!
ரூ.1000த்துக்கு 1.95லட்சம்..! என்ன நியாயமா குமாரே..!” இவ்வாறு அந்த நெட்டிசன் தனது பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் MyV3Ads பயனித்த வழி.. விசாரணைக்கு மற்றும் அவர்களின் வழிமுறைகள் பற்றியும் நெட்டிசன் iRoBo_V3.0 பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் 2014 முதல் 2024 வரை எப்படி எல்லாம் வந்தது என்பது குறித்தும், அந்த நிறுவனம் எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பது குறித்தும் விளக்கி உள்ளார். அதில் அவர் கூறுகையில், " MyV3Ads பயனித்த வழி.. விசாரனைக்கு மற்றும் அவர்களின் வழிமுறைகள் புரிய இதை பாருங்கள்.. 2014ஆம் ஆண்டு Bogar herbal care என்ற நிறுவனம்.. இந்த நிறுவனம் மூடபட்டுவிட்டது.

Veeras Health care private Ltd, உணவு பொருள் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக பதிவு செய்யபட்டு இயங்கியது, அது சம்பந்தமான 2020ல் செய்தி வெளியாகியத. இந்த veeras health care pvt Ltd இதை அடிப்படையாக V3 online TV அமைக்கபட்டது..! 2021ல் இந்த நிறுவனம் மூடபடுகிறது..இதில் பாதிப்புகுள்ளனவர்கள் கோவையில் 2021லேயே புகார்கள் அழித்துள்ளனர்..! அதில் நடந்த மோசடிகள் பற்றிய தகவல்கள்..! அதுபற்றிய உரையாடல் அப்போது பாதிக்கபட்ட நபர் இன்று உரையாடியது ஆடியோவில் உள்ளது (ஆடியோவை இணைத்துள்ளார்).

அதன்பிறகு 2021நவம்பரில் myv3ads ஆரம்பிக்கபடுகிறது,அதனுடைய விபரங்கள் மற்றும் அதில் இருக்கும் குளறுபடிகள் விருது கொடுத்தவர்கள்,வாங்கியவர்கள்,அவர்களே மருந்து உற்பத்தி,அந்த மருந்து எந்த வித நோய்களையும் குணப்படுத்தாது. இதை வைத்து பேசுவது தனிபட்டநபர் கருத்து என தப்பித்து கொள்ள ஏகபட்ட விஷயங்கள் உள்ளன. Myv3Adsல் zonal storeகளில் உள்ள குளறுபடிகள் ஏற்னவே விளக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் அரசு மற்றும் கவல்துறை எடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே இதறக்கு தீர்வு உள்ளது..!" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+