கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேடைக்கு வாங்க.. கோவை அரசு விழாவுக்கு வந்த பாஜக எம்எல்ஏ வானதியை அழைத்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் அரசு விழாவுக்கு வருகை தந்த எம்எல்ஏ வானதி சீனிவாசனை விழா மேடையில் வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததை அடுத்து அவர் திமுக அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தார்.

Recommended Video

    கோவை வ உ சி மைதானத்தில் நடந்த அரசு விழா - வீடியோ

    கோவையில் ரூ 89.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, முதலிட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பணிகளுக்காக கோவை மற்றும் திருப்பூருக்கு இரு நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார்.

    இந்த விழா மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருந்தார். இந்த விழாவில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன.

    அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் படம் மிஸ்ஸிங்..அதிமுக, பாஜகவுக்கு முன்வரிசை! கோவையில் என்ன நடக்குது?அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் படம் மிஸ்ஸிங்..அதிமுக, பாஜகவுக்கு முன்வரிசை! கோவையில் என்ன நடக்குது?

    முதல் வரிசை

    முதல் வரிசை

    கோவை வ உ சி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது போல் திமுக எம்எல்ஏக்களுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி பேதமில்லாமல் எதிர்க்கட்சிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளது பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

    அதிமுக எம்எல்ஏக்கள்

    அதிமுக எம்எல்ஏக்கள்

    இந்த அரசு விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் வரவில்லை. ஆனால் பாஜக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வருகை தந்திருந்தார். அப்போது முதல் வரிசையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்றனர்.

    வானதி

    வானதி

    உடனே முதல்வர் ஸ்டாலின், வானதியை மேடையில் அமருமாறு கூறினார். இதையேற்று மேடைக்கு சென்ற வானதி சீனிவாசன் திமுக அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதியை அமர வைப்பது புரோட்டோ காலாக இருந்தாலும் கடந்த கால ஆட்சிகளில் இது போல் நடைபெறவில்லை.

    முதல்வர் பேச்சு

    முதல்வர் பேச்சு

    அதனால் இந்த விவகாரம் பாராட்டத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் சட்டமன்ற தேர்தலில் கோவையில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவிட்டாலும், நலத்திட்ட உதவிகளை வழங்க வந்துள்ளேன். ஒட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என பார்க்காமல் அனைவருக்கும் சேவை செய்து வருகிறோம் என்றார்.

    English summary
    CM MK Stalin gives seat for Coimbatore South constituency MLA Vanathi Srinivasan in dias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X