முதல்வர் தலைமையில் பேத்தி திருமணம்! கொங்கு மண்டல திமுக முன்னோடி! கெத்து காட்டிய பொங்கலூர் பழனிசாமி!
கோவை: தனது பேத்தி திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்திக் காட்டி தலைமையிடம் தனக்கு உள்ள செல்வாக்கை கொங்கு மண்டல திமுகவினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயலாளராக ஒரு காலத்தில் கோலோச்சிய பொங்கலூர் பழனிசாமி வைகோ திமுகவை விட்டு பிரிந்த போது கட்சிக்காக பேயாக உழைத்து கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்றார்.
கால ஓட்டத்தில் உட்கட்சி அரசியல் காரணமாக கோவை மாவட்ட ஆக்டிவ் அரசியலில் இருந்து மெல்ல ஒதுங்கிய அவர் தற்போது திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருக்கிறார்.

பொங்கலூர் பழனிசாமி
கொங்கு மண்டல திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி திருமணம் இன்று நடைபெற்றது. இவரது மகன் வழிப் பேத்திக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகனுக்கும் கோவையில் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார். கடந்த வாரம் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொங்கலூர் பழனிசாமி இல்ல மண விழாவில் பங்கேற்பதற்காக மட்டும் இன்று பிரத்யேகமாக சென்னையிலிருந்து கோவை வந்திருந்தார்.

கட்சிக்கு உழைப்பு
திமுகவிலிருந்து வைகோ பிரிந்து மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அவருடன் சென்ற 9 திமுக மாவட்டச் செயலாளர்களில் கோவை மாவட்ட திமுகச் செயலாளராக இருந்த கண்ணப்பனும் ஒருவர். அப்போது கோவையில் திமுக கூடாரம் காலி எனப் பேசப்பட்ட நிலையில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஊர் ஊராக சென்று கொடியேற்றி வைத்து கட்சிக்காக அசுர உழைப்பை செலுத்தியவர் பொங்கலூர் பழனிசாமி. இதன் காரணமாகவே இவர் மீது கொண்ட நன்மதிப்பால் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் என அடுத்தடுத்து அவருக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதி கலகலப்பு
பொங்கலூர் பழனிசாமி குடும்பத்தினர் பெங்களூருவில் தொழில்கள் தொடங்கியதை அறிந்த கருணாநிதி இவரை அவரது பாணியில் 'வாய்யா பெங்களூர் பழனிசாமி' என நகைப்புடன் அழைத்த வரலாறெல்லாம் இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வரை ஆக்டிவாக அரசியல் செய்து வந்த பொங்கலூர் பழனிசாமி அதன் பிறகு ஏற்பட்ட லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக தலைமை சொல்லும் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு மெல்ல ஒதுங்கிக் கொண்டார்.

பைந்தமிழ் பாரி
இதனிடையே அவரது மகன் பைந்தமிழ் பாரி திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். இவருடைய மகளுக்கும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன் மகளுக்கும் தான் திருமணம். இந்நிலையில் பொங்கலூர் பழனிசாமியின் செல்வாக்கு அவ்வளவு தான், திருமண விழாவுக்கு முதல்வர் எங்கே வரப் போகிறார் என கோவையில் அவரது எதிர் தரப்பினர் பேசி வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தனது இல்ல மணவிழாவை நடத்திக்காட்டி, அதுவும் முதல்வரை கோவைக்கு வரவழைத்து கொங்குவில் மீண்டும் கெத்துகாட்டியிருக்கிறார் பொங்கலூர் பழனிசாமி.
-
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications