"எப்படி இருக்கீங்க".. பிபிஇ உடையோடு.. கனிவாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சியடைந்த மக்கள்!
கோயம்புத்தூர்: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார்.

நேரில்
அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கனிவாக நலம் விசாரித்தார். பிபிஇ கிட் அணிந்து இருந்ததால், மருத்துவர்கள் போல அருகில் சென்று நலம் விசாரித்தார். ஸ்டாலின் உடன் சில மருத்துவர்களும் உடன் இருந்தனர். முதல்வரே இப்படி நேரில் வந்து தன்னை விசாரிப்பதை பார்த்து நோயாளிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

எப்படி?
எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. சாப்பாடு நல்லா இருக்கா என்றெல்லாம் ஸ்டாலின் நோயாளிகளிடம் கேட்டார். அதோடு மருத்துவர்கள் எப்படி பார்த்துக்கொள்கிறார்கள், ஏதாவது தேவை இருந்தால் சொல்லுங்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்றும் ஆறுதலாக முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் பேசினார்.

கவச உடை
தமிழகத்தில் இதற்கு முன் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது இல்லை. கேரள முதல்வர் பினராயி உட்பட மற்ற சில முதல்வர்கள் சிலர் இப்படி பிபிஇ கிட்டோடு மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டாலும் கூட, நோயாளிகளின் வார்டுக்கு சென்று அவர்களுடன் மாநில முதல்வர்கள் இப்படி நெருக்கமாக பேசியது இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் இப்படி நேரடியாக நோயாளிகளை சந்தித்துள்ளார்.
கோவை
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மருத்துவமனையில் இப்படி ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நேரடியாக முதல்வரே களமிறங்கி பணிகளை ஆய்வு செய்வதும், நோயாளிகளை சந்திப்பதும் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோவை மக்களுக்கு இது உணர்வு ரீதியாக நெருக்கத்தை கொடுத்துள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications