நடு வீட்டில் திருடன் மாட்டிக்கொண்டது போல அதிமுகவினர் மாட்டிக்கொண்டார்கள்.. கிண்டலடித்த ஸ்டாலின்
கோவை: நீட் தேர்வு விவகாரத்தில் நடு வீட்டில் திருடன் மாட்டிக்கொண்டது போல அதிமுகவினர் மாட்டிக்கொண்டார்கள் எனவும், நீட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை கோவை கோவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம்
இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய முதல்வர் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சியில் தொடரட்டும் நம் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆட்சி என்பது ஐந்து ஆண்டு காலம், அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதுதான் நல்ல ஆட்சி. ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் சொன்ன வாக்குறுதுகளில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.

முதல்வர் ஸ்டாலின்
மேலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் அதனால்தான் காணொளி மூலம் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் முதல் கூட்டமாக நடைபெறுகிறது. வழக்கம் போல் சிறப்பாக செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் ஒரு தாய் பிள்ளை பாசத்தாலும் அன்பாலும் உறவாலும் நீங்கள் வேறல்ல நான் வேறல்ல என்ற உணர்வுடன் நான் பரப்புரை மேற்கொள்கிறேன். பச்சை துண்டுக்கு கம்பீரமும் மரியாதையும் அளித்தவர் நாராயணசாமி. உழவர்களுக்கு இலவச மின்சாரம் அறிவித்தார் கலைஞர். நாராயணசாமியின் கோரிக்கையால் இலவச மின்சாரம் வழங்கியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தான்.

கோவைக்காக பல திட்டங்கள்
கடன் தள்ளுபடி , 3 வேளாண சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறுத்தளவில் நாராயணசாமி நாயுடு கனவினை நிறைவேற்றியது கழக ஆட்சி. கோவைக்கு கழக ஆட்சி செய்த திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சியால் சாதனைகளை சொல்ல முடியுமா?. 8 மாத காலத்தில் கோவைக்காக பல திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. வேறு ஆட்சியில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா. இது ஸ்டாலினோட அரசு அல்ல உங்கள் அரசு, போன ஆட்சியில் பணத்தை கொள்ளை அடித்தவர்களைத் தான் பார்த்திருப்பீர்கள் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் சாலைகள் அமைக்கப்படும்.

நீட் தேர்வு விவகாரம்
நீட் தேர்வு பல லட்சம் செலவு செய்து பயிற்சி பெற்று மருத்துவராகலாம், ஆனால் இது அனைத்து மாணவர்களாலும் இயலாது. ஆளுநரால் திருப்பி அனுப்பபட்ட மசோதா மீண்டும் 8ஆம் தேதி நிறைவேற்றப்படும். அதிமுக அரசு அனுப்பிய மசோதா நிராகரிக்கப்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் கேள்வி கேட்டேன். ஆனால் எந்த தகவலும் வரவில்லை என அப்போதைய சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை மறைக்க நினைத்தார்கள் அன்று நீட் மசோதாவை நிறைவேற்ற மறுத்தார்கள். படிப்பதற்கே தகுதி வேண்டும் என்பதே இந்த நீட் தான். மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஆகிவிட முடியாது தேர்வில் வெற்றி பெற்றால்தான் முடியும்.

மேலோட்டமாக பார்க்கக் கூடாது
நீட்டை மேலோட்டமாக பார்க்க கூடாது முகமூடியை கழற்றி பார்க்க வேண்டும், நீட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை ,ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார். அதிமுக தலையாட்டி ஏற்றுக் கொண்டதன் விளைவு தான் இந்த பிரச்சனை. நீட் மட்டுமல்ல தமிழ்நாட்டு விரோதமாக எது வந்தாலும் எதிர்ப்போம் அனுமதிக்க மாட்டோம். உள்ளாட்சி அமைப்பக்ளில் வெற்றி பெற்றால் கோட்டையில் நிறைவேற்ற கூடிய திட்டங்கள் அனைத்து கிரமாங்களுக்கும் தெருக்களுக்கும் செல்லும், கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை வாரி வழங்குங்கள் என தெரிவித்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications