ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா?
கோயம்புத்தூர்: தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூருக்கு விரைவில் நேரில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய அமைச்சரான சம்பத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்த முக்கியத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். முதல்வர் விஜய்யின் கோவைப் பயணம், மாவட்டத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்
கோயம்புத்தூர் மாநகர மக்களின் பல ஆண்டுகாலப் பெருங்கனவாகவும், போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கியத் தீர்வாகவும் இருப்பது மெட்ரோ ரயில் திட்டமாகும். இது குறித்துப் பேசிய அமைச்சர் சம்பத்குமார், கோயம்புத்தூர் மாநகரத்திற்கு அதிநவீன மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவது என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இடம்பெற்றிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தபோது, கோயம்புத்தூர் (கோவை), மதுரை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது கோவை மாநகரம் சர்வதேசத் தரத்திலான வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து உள்கட்டமைப்பைப் பெறும்.
முதல்வர் விசிட்
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் தமிழகத்தின் மிக முக்கிய உற்பத்தி மற்றும் தொழில்துறை மையங்களாகத் திகழ்கின்றன. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் விரைவில் கோவைக்கு நேரில் வரவிருப்பது நடுத்தர மற்றும் சிறு, குறு தொழிலதிபர்கள் (MSMEs) மத்தியிலும் பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில் விஜய்-யின் கோவை பயணம் எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications