போற்றிப்பாடடி பெண்ணே... தேவர் காலடி மண்ணே - காபி குடிக்க வந்த கமலை உற்சாகப்படுத்திய கோவை ரசிகர்
கோவை: காலை நேரத்தில் காபி குடிக்கப் போனவர்களுடன் கமல்ஹாசன் ஜாலியாக உரையாட... அவரை அந்த நேரத்தில் எதிர்பாராத கோவைவாசிகள் போற்றிப்பாடடி பெண்ணே... என்று தேவர்மகன் பாடலை பாடி உற்சாகமடைந்தனர். சட்டசபைத்தேர்தல் பிரச்சார களமே கச்சேரியால் களைகட்டியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டு வாக்கு சேகரிக்க கிளம்பி விட்டனர் வேட்பாளர்கள். கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது காரணம் அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தான் போட்டியிடுவதாக அறிவித்த நாளில் இருந்தே அந்த தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்து விட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே தனது பிரச்சாரத் தொடங்கி விட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்.

அனல் பறக்கும் பிரச்சாரம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனி அணியாக களமிறங்கியுள்ளது. ஐஜேகே, சமக உள்ளிட்ட 10 கட்சிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சியோடு வாக்கு சேகரிப்பு
கோவையில் தங்கியிருக்கும் கமல்ஹாசன் காலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போதே வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கிறார். சிலம்பம் சுற்றுகிறார். இன்று கோவை பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார். பூ மார்கெட் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

காந்திபுரத்தில் காபி
காந்திபுரத்திற்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தனியாருக்கு சொந்த மான உணவு விடுதிக்கு சென்று காபி குடித்தார். அந்த நேரத்தில் அங்கு கமலை பார்த்தவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். வாக்காளர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.

போற்றிப்பாடடி பெண்ணே
கமல்ஹாசனை பார்த்த உற்சாகத்தில் ஒரு ரசிகர் ஓடோடி வந்து போற்றி பட பெண்ணே, தேவர் காலடி மண்ணே என்ற பாடலை பாடிகாட்ட, அதை கேட்டு ரசித்துக்கொண்டே காபி குடித்தார் கமல்ஹாசன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications