Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் 50 வயசு சவுமியா.. இவரெல்லாம் ஒரு பெண்ணா.. அத்தனை பேர் சொல்லியும் கேட்காத முரட்டுத்தனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னையில் கடந்த வருடம் 5 வயது சிறுமியை நாய் கடித்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி, அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வளர்க்கப்படும் நாய்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கோவையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.

சென்னையில் கடந்த மாதம் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது.. கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதானவர்கள் மாரியப்பனும், அவரது மனைவியும்.. சம்பவத்தன்று இரவு 2 பேரும் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த ராட்வீலர் நாய் மாரியப்பனுக்கு தொல்லை தந்துள்ளது.. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் மாரியப்பன் தட்டிக் கேட்டுள்ளார்..

Coimbatore Kovai Sowmiya

நடுரோட்டில் பயத்தில் அலறிய வயதான தம்பதி

உடனே ஆத்திரமடைந்த கவியரசன், தன்னுடைய ராட்வீலர் நாயை ஏவி விட்டு, வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்திருக்கிறார்.. மாரியப்பனின் வேட்டியை இழுத்து அரை நிர்வாணமாக்கிவிட்டது.

அவர்கள் கதறுவதையும், அழுது புலம்புவதையும் கண்டு ரசித்துள்ளார். வயதான தம்பதியினரால் ஓடக்கூட முடியவில்லை.. அதனால் பயத்திலேயே அலறி கூச்சல் போட்டுள்ளனர்.. அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கவியரசனை கண்டித்திருக்கிறார்கள்.

ஆனால், தனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும், பிரபலமான வழக்கறிஞர்களை தெரியும் என்றெல்லாம் சொல்லி அவர்களையும் கவியரசன் மிரட்டியிருக்கிறார்..இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வைரலாகி சென்னைவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவை சவுமியா

இதோ கோவையில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் பொன்வேல்.. இவருக்கு 33 வயதாகிறது.. இவருக்கு 5 வயதில் மேகாலினி என்ற மகளும், 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இவர்களது பக்கத்து வீட்டில் சவுமியா என்ற 50 வயது பெண், தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. சவுமியா தன்னுடைய வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இதற்கு 2 வருடங்களுக்கு முன்பேயே அந்த பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

கடித்து குதறிய நாய்கள்

காரணம், இந்த நாய்கள் கடந்த 2023ம் ஆண்டு, அங்குள்ள பல பேரை கடித்து குதறிவிட்டதாம்.. எனவே, அப்பகுதிவாசிகள் சவுமியாவிடம் நாயை வளர்க்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். ஆனாலும், சவுமியா தன்னுடைய வீட்டில் தொடர்ந்து நாய்களை வளர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 4ம் தேதி சிறுமி மேகாலினி தன்னுடைய வீட்டருகே விளையாடி கொண்டிருந்தாள்.. இதனை பார்த்த சவுமியா, சிறுமியை வேறு பக்கம் சென்று விளையாடுமாறு கூறியிருக்கிறார்.. ஆனால் சிறுமி தொடர்ந்து அங்கேயே விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சவுமியா, தன்னுடைய நாயை ஏவி சிறுமியை கடிக்க விட்டுள்ளார்.

கடுமையான காயம்

இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்திருக்கிறாள்.. அவரது கதறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி விட்டிருக்கிறார்கள்.. பிறகு, கடுமையாக காயமடைந்த மேகாலினியை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த பொன்வேல், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியாவை கைது செய்தனர். அத்துடன், அவரது மகன்கள் சூர்யா (23), சாந்தாராம் பிரகாஷ் (21) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சவுமியாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் தற்போது அடைத்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+