இல்லறத்தில் நாட்டமில்லாத கணவன்.. பெற்றோருடன் உயிரைவிட்ட கோவை பெண்.. மாமனார், மாமியாரும் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் பெற்றோருடன் இளம் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், அவரது கணவரை தொடர்ந்து மாமனார், மாமியாரையும் தனிப்படை போலீசார் கைது செய்தார்கள். இல்லறத்தில் நாட்டம் இல்லாத இளைஞரின் செயலால் ஒரு குடும்பமே உயிரிழந்திருக்கிறது.

கோவை கவுண்டம்பாளையம் ஜவகர் நகரை சேர்ந்த 65 வயதாகும் கணேசன் என்பவருடைய மனைவி விமலா (55). இவர்களது மகள் தியா காயத்ரிக்கு 25 வயது ஆகிறது. இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கோவை வடவள்ளியை சேர்ந்த சிவக்குமார்(59) மற்றும் லதா(55) தம்பதியின் மகன் 29 வயதாகும் தீட்சித் என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

Coimbatore: a Father-in-law, mother-in-law have been arrested over the death of a young women family

தீட்சித் மற்றும் விமலாவிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. தீட்சித் விமலா தம்பதி திருமணம் ஆன உடன் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

பெங்களூருவில் வசித்து வந்த தீட்சித் காயத்ரி தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியா காயத்ரி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருக்கிறது. பின்னர் தனது கணவர் இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பதாகவும், ஆனாலும் அவருடன் சேர்ந்து வாழுமாறு மாமனார்-மாமியார் வற்புறுத்துவதாகவும் தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதை கேட்ட அவர்கள், தங்களது ஒரே மகளுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி வேதனை அடைந்தனர். இதனிடையே வாழ்க்கையை வெறுத்து தவறான முடிவினை எடுத்தனர். மகளுடன் கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு கடந்த 21-ந் தேதி 3 பேரும் உயிரிழந்தனர்.

இதனிடையே தற்கொலைக்கு முன்பு தியா காயத்ரி எழுதிய கடிதத்தை கோவை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்றும், அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுங்கள் என்றும் எழுதி இருந்தார். மேலும் தனது கணவரின் நடத்தை குறித்தும் தியா காயத்ரி விரிவாக எழுதி இருந்தார்.

அதன்பேரில், பெங்களூரு விரைந்த போலீசார், தீட்சித்தை அழைத்து வந்து வழக்கு பதிவு செய்த விசாரித்தனர். திருமணம் ஆன ஓராண்டில் நடந்த தற்கொலை என்பதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. முடிவில் தீட்சித் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனிடையே தீட்சித்தின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் லதா ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+