சுப்பிரமணி கேட்டை திறய்யா.. கோவை தடாகத்தில் யானையின் செயலால் ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமத்தில் அடிக்கடி காட்டு யானைகள், உணவு மற்றும் தண்ணீருக்காக வந்து செல்வது வழக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் தான் யானை அதிகமாக ஊருக்குள் வருகின்றன. யானைகள் பொதுவாக கூட்டமாக வந்தால் பெரிய அளவில் சிக்கல் இல்லை.. ஆனால் ஒன்றை யானையாக வந்தால், ஆபத்து அதிகம் ஆகும். எதிரே வருபவர்களை தாக்கும். பெரிய தடாகம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் கேட்டை திறந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை, மீண்டும் அதே வழியில் திரும்பிச் சென்றது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம், தடாகம் மற்றும் சின்னத்தடாகம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சி, மூலக்காடு போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது. அடர்ந்த காப்புக் காடுகள் நிறைந்த இப்பகுதியில் இருந்து வறட்சி மற்றும் வெயில் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதையாகி இருக்கிறது.

Coimbatore A lone wild elephant opened the gate and entered a house at midnight in Periya Thadagam

சில நேரங்களில் பழங்குடியினர் குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுத் தண்ணீர் தொட்டிகளை தேடின ஒற்றைக் காட்டு யானைகள் வந்து செல்வது உண்டு. அப்படி ஒரு முறை வந்த யானைகள், தங்கள் குடும்பத்தையே அழைத்து வருவதும் உண்டு.அப்படித்தான் கடந்த ஏப்ரல் மாதம் தடாகம் பகுதியில் 3 குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் கொண்ட கூட்டம் ஒட்டுமொத்தமாகப் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்தன.

​
​அங்கு இருந்த பொதுத் தண்ணீர் தொட்டி மற்றும் காடுகளின் எல்லையில் இந்த 7 யானைகளும் தங்களது குட்டிகளைப் பத்திரமாக நடுவில் நிறுத்திக் கொண்டு குடித்தன. இந்த வீடியோ அப்போது பெரிய அளவில் வைரலானது. அதனை தொடர்ந்து அவ்வப்போது கோவை வனப்பகுதிகளில் யானை ஊருக்குள் வருவதும் போவதுமான சம்பவங்கள் நடக்கின்றன. கோவை மாநகரரை ஒட்டியுள்ள நஞ்சுண்டாபுரம், தடாகம் , சின்ன தடாகம், நரசிபுரம், சின்னாம்பதி, மதுக்கரை, அனுவாவி சுப்பிரமணிய சாமி கோயில் போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாவே இருக்கிறது. அவ்வப்போது மருதமலை பகுதிகளிலும் யானைகள் உலா வருகின்றன.

அந்த வகையில் நள்ளிரவில் கோவை பெரிய தடாகம்- குட்டைவழி செல்லும் சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று கால்நடை தீவனங்கள் உள்ளதாக என்று பார்த்தது. பின்னர் அதே கேட் வழியாக யானை மீண்டும் வெளியே வந்து வெளியேறி காட்டுப்பகுதிக்குள் சென்றது.

ஒருவேளை யானை எதிர்பார்த்த தீவினங்கள் இருந்து அதனை ஒரு முறை சாப்பிட்டிருந்தால், அங்கு யானைகள் அடிக்கடி வரவும் செய்யும். சினிமா பட பாணியில் சொல்வது என்றால், சுப்பிரமணி, கேட்டை திறய்யா... உள்ளே என்ன பன்றா.. இதோ நானே கேட்டை திறந்து வாரேன் என்பது போல் யானை வந்து சென்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+