ஒரே ஒரு கையெழுத்துதான்.. தலையெழுத்தே மாறியது.. எஸ்ஐ ஆக இருந்தவர்.. இன்று ஏட்டாக மாறியது எப்படி?
கோவையில் ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்ததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை போட்டு ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்ததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். இவர் விபத்து இன்சூரன்ஸ் விவகாரத்தில் போலியாக மோசடி செய்யதாக குற்றச்சாட்டில் சிக்கி இன்று ஏட்டாக மாறி உள்ளார்.
அப்படி என்ன தவறு செய்தார், ஏன் எஸ்ஐ ஆக இருந்தவர் தற்போது ஏட்டாக மாறினார். என்பதை இப்போது பார்ப்போம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை. இது தெரிந்ததும் இன்சூரன்சை புதுப்பித்து, மணிமாறன் தான் பணியாற்றும் போலீஸ் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்குப்பதிவு செய்தாராம்.

இதனிடையே விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஆவணங்களை காணவில்லை என்ற சான்றிதழ்களை அவர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸ் ஆவணங்களில், இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை அவரே இட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டார்கள்.
போலீஸ் ஆவணங்களை போலியாக தயாரித்தது, திருத்தியது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிமாறன் சப்-இன்ஸ்பெக்டரை, அப்பதவியில் இருந்து தலைமைக்காவலராக (ஏட்டு) பதவி இறக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாகன இன்சூரன்ஸ் மோசடி மற்றும் மொபைல் போன், ஓட்டுனர் உரிமம் காணவில்லை என்பன போன்ற புகார் தரும் நபர்களிடம் பணம் லஞ்சமாக பெற்று, சான்று வழங்கியது, அதிகாரிகள் விசாரணையில் அம்பலமானதால் மணிமாறன் ஏட்டாக பதவிறியக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications