வேலுமணியின் கோவை திட்டத்தில் ட்விஸ்ட் – எடப்பாடியிடம் குமுறும் கோவை அதிமுகவினர்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டுகிறது. கூட்டணியை இறுதி செய்து தேர்தல் வாக்குறுதிகளும் அளித்து அதிமுக தெம்பாக இருக்கும் நிலையில் உள்கட்சி பிரச்சனை அவர்களை பாடாய் படுத்துகிறது. அந்த வரிசையில் கோவையில் வேலுமணியின் வலதுகரமாக இருந்து ஓரம்கட்டப்பட்ட சந்திரசேகர் முக்கிய தொகுதியை குறி வைத்திருப்பது கோவை அதிமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுகவும் முயற்சி செய்கின்றன. இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கிட்டத்தட்ட கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டன.

கொங்கு மண்டலம்
தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வியூகங்கள், முக்கிய நிர்வாகிகளின் கட்சி மாற்றம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. கடந்த 2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்தித்த அனைத்து தேர்தர்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுக பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
எதிரும் புதிருமாக இருந்த அமமுக டிடிவி தினகரனை கூட்டணிக்கு அழைத்து வந்து மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மேடை ஏறிவிட்டனர். ஆனால் அதிமுகவிற்கான பிரச்சனைகள் ஓயவில்லை. அதிமுகவின் பலமே கொங்கு மண்டலம் தான். எம்ஜிஆர் காலத்தில் இருந்து, ஜெ., மறைந்தும் கடந்த 2021 எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரை கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்துள்ளது.
வேலுமணி பிளான்
இப்போதும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கருப்பணன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் என்று அங்கு முக்கிய தலைவர்கள் உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக தக்க வைத்திருப்பதில் வேலுமணியின் பங்கு முக்கியமானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெற்றது.
2026 தேர்தலிலும் வேலுமணி கோவை மாவட்டத்தை முழுவதுமாக கைப்பற்ற திட்டமிட்டு வருகிறார். அதற்கு நடுவே கோவை அதிமுகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளது. இதுகுறித்து கோவை அதிமுகவினர் கூறுகையில், "வேலுமணியின் வலதுகரமாக வலம் வந்த சந்திரசேகருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர், எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர், தேசிய பாராலிம்பிக் சங்கம் தலைவர் பதவிகள் இருந்தன.
சந்திரசேகர் பஞ்சாயத்து
கோவை மாநகராட்சி மேயர், எம்எல்ஏ, எம்பி என்று எல்லா பதவிகளிலும் சந்திரசேகர் பெயர் இடம் பெற்றது. கோவையின் நிழல் அமைச்சராக வலம் வந்தார். ஆனால் ஆட்சி மாறியதும் பல்வேறு பிரச்சனைகள், கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகர் மீது வேலுமணி அதிருப்தியானார். கட்சியில் ஓரமும் கட்டப்பட்டார். இதனால் கடந்த 2025 ஏப்ரல் மாதம் சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகினார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டார். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் நான் தான் வேட்பாளர் என்று நிர்வாகிகள், தொண்டர்களிடம் சொல்லி களத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார். சந்திரசேகர் வேலுமணிக்கு எதிராக செயல்பட்டவர். நிதி, கட்சி உள்ளிட்ட விஷயங்களில் மோசடி செய்தார். கட்சி விரோத செயல்களிலும் ஈடுபட்டவர்.
எடப்பாடியிடம் புகார்
தன்னை வளர்த்துவிட்ட வேலுமணிக்கு எதிராக துரோகம் செய்த சந்திரசேகர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார். அதிமுகவுக்காக உண்மையாக உழைத்தவர்கள் பலர் இருக்கும்போது சந்திசேகருக்கு சீட் வழங்குவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளிக்கவுள்ளோம்" என்றனர். இந்த பிரச்சனையால் கோவை அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications