சென்னைக்கு எட்டாத கனவு.. கோவை விமான நிலையம் அடியோடு மாறுது.. குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்பு ‌கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கொங்கு மண்டலத்தின் மிகப்பெரிய நகரமான கோவையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் எட்டாத உயரத்திலேயே இருந்தது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததால் இனி விரிவாக்க பணிகள் நடைபெறப்போகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. எனவே, தற்போதைய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிற அனுமதிப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Coimbatore airport airport

மேற்குத் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தின் தொழில் மையத்திற்கு முக்கிய நுழைவுவாயிலாக கோயம்புத்தூர் மாநகரம் திகழ்கிறது. இது கேரளாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது இங்கு விமான நிலையம், ரூ.2,200 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெற உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19 நிலவரப்படி, கையகப்படுத்தப்பட வேண்டிய 633 ஏக்கரில் வெறும் 1.77 ஏக்கர் மட்டுமே நிலுவையில் உள்ளது. இருகூர், நீலாம்பூர், களப்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள 23 இடங்களில் இந்த நிலங்கள் அமைந்துள்ளன.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 472.325 ஏக்கர் நிலத்தில் பணிகளைத் தொடங்குவதற்கான அனுமதியைத் தமிழக அரசு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கியது. இதையடுத்து 2025ம் ஆண்டு ஜனவரியில் இந்திய விமான நிலைய ஒழுங்கு ஆணையம் 470.17 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, சுவரமைப்பது உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியது. தற்போது மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றார்கள்.

புதிய முனையம்

கோபி விமான நிலையத்தில் தற்போதுள்ள முனையத்தை விட 4 மடங்கு பெரியதாக, 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன புதிய முனையம் அமைக்கப்படவுள்ளது. இது கோவையின் உள்ளூர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது


ஓடுதள விரிவாக்கம்

கோவை விமான நிலையத்தில் தற்போதுள்ள 2,990 மீட்டர் ஓடுதளம் 3,810 மீட்டராக உயர்த்தப்படும். இதன் மூலம் அகலமான உடலமைப்பு கொண்ட பெரிய ரக விமானங்கள் பாதுகாப்பாக வந்து செல்ல முடியும். இது சர்வதேசப் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தை பெருமளவு அதிகரிக்க உதவும்.

பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி

கோவை விமான நிலையத்தில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 1.5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-26 நிதி ஆண்டில் கோவை விமான நிலையம் 34.2 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 159% வளர்ச்சி ஆகும்.புதிய முனையப் பகுதியில் இருந்து எல் & டி பைபாஸ் சாலையை நேரடியாக இணைக்கும் வகையில் 200 அடி அகல புதிய சாலை அமைப்பதற்காக, தமிழக அரசு கூடுதலாக 7.44 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளது.

தற்போது கோவை விமான நிலையத்தில் 9,000 அடி ஓடுதளம் இருக்கிறது. இதனை 12,000 அடியாக உயர்த்தப்படுவதன் மூலம் போயிங் 777 மற்றும் ஏர்பஸ் ஏ350 போன்ற பெரிய ரக சர்வதேச விமானங்கள் மற்றும் நீண்ட தூரச் சரக்கு விமானங்கள் இனி கோவைக்கு தாராளமாக வந்து செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+