கொங்கு ஸ்லாங்.. கோவை பாஷையில் இதையெல்லாம் எப்படி சொல்வாங்க தெரியுமா? வீடியோ பாருங்க
கோவை: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வட்டார வழக்கில் பேசுவார்கள். சென்னையில் பலரும் வந்துவிட்டதால் சென்னையில் எல்லா வட்டார வழக்கும் புழங்குகிறது. கொங்குமண்டலமான கோவை வட்டார வழக்கு தமிழ்நாட்டிலேயே மரியாதையான மற்றும் வித்தியாசமான வார்த்தைகள் அதிகம் கொண்டவை . அதை பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வட்டார வழக்கு உள்ளது. மதுரை மண்டலத்திற்கு ஒரு ஸ்லாங்கும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திற்கு ஒரு ஸ்லாங்கும், திருநெல்வேலி ஸ்லாங், நாகர்கோவில் ஸ்லாங், சென்னை ஸ்லாங், திருச்சி உள்ளிட்ட டெல்டாவில் ஒரு ஸ்லாங், சென்னை ஸ்லாங் ஆகியவை உள்ளன. சென்னை வட்டார வழக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கிறது.

திருநெல்வேலி வட்டார வழக்கு என்பது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சிலபகுதிகளில் இருக்கும். மதுரை வட்டார வழக்கு என்பது மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு பாதியில் இருக்கும் (பழனியில் இருந்து மாறிவிடும்).
கோவை வட்டார வழக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், கிருஷ்ணகிரி வரை இருக்கும். கோவை வட்டார வழக்கு மற்ற ஸ்லாங்கில் இருந்து தனித்துவமானது. மற்றவர்கள் பேசுவதை, கொங்கு ஸ்லாங்கில் எப்படி பேசுவார்கள் என்பதை நெட்டிசன்கள் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பதிவினை இப்போது பார்ப்போம்.

இவ்வளவு பெருசு - எத்தச்சோடு
கொஞ்சம் - இத்துணூண்டு
பின்னால் - பொறகாண்ட
வீடு - ஊடு
முட்டை - மொட்டு
உறுதியாக - கண்டீசனா
Healthy - கெளுத்தி
கிறுக்கன்- வெப்பலத்தான்
Sister Inlaw - நங்கை/ நங்கயா
வேகமா - மின்னீட்டுக்குள்ள
Widower - கட்டீத்தின்னி
sink-சலதாரி
டிரைவர்-டைவரு
நைட்டு - பொழுதோட
தட்டு -வட்டல்
பாக்கெட்- ஜோப்பு
சும்மா-பொட்டாட்ட
சண்டை-ஓரியாட்டம்
கிருக்கன்-திருவாத்தான்
பரவால்ல-போச்சாது
பின்புறம்-பொடக்காலி
உஷ்ணம்- உப்புசம்
தள்ளிப்போ- அக்கடால போ
என்னேடாது- என்றது
அதிகமா -எச்சா
ஒண்ணா- ஒட்டுக்கா
லாரி-ராலி
கோபம்-சீராட்டு
காலை- வெடியால
இதெல்லாம் சிறு உதாரணங்கள்.இதுபோல் நிறைய வார்த்தைகள் வேறு மாதிரி இருக்கும். அதுமட்டுமல்ல.. மிகவும் மரியாதையான வட்டார வழக்கு உள்ள பகுதி என்றால் கொங்கு பகுதிதான். கண்ணு இங்கு வா கண்ணு என்றுதான் யாரையும் அழைப்பார்கள். சென்னையில் எப்படி வா தல போல தல என்பது போல்.. அங்கு கண்ணு என்பது அதிகமாக இருக்கும்.
ஒருவர் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பதை இரண்டு வார்த்தைக்கு மேல் சேர்ந்து பேசினாலே கண்டுபிடித்து விடமுடியும். அவர்களை தனியா கண்டுபிடித்து விட முடியும். மதுரை, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி மக்களையும் இதேபோல் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். மேலே சொன்ன எந்த ஸ்லாங்கும் இல்லை என்றால் அவர்களை டெல்டாவை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
மீண்டும் மீண்டும் @akaasi தொந்தரவு செய்யாதீர்கள்! #கொங்குஅகராதி pic.twitter.com/h9eLjKVxb7
— பாலா... (@brubala) October 9, 2023
கொங்கு தமிழை அப்படியே ஒவ்வொரு வார்த்தையிலும் உச்சரிப்பவர் என்றால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேச்சிலும் அப்படியே கொங்கு தமிழ் தவழும்.. மற்றவர்கள் பேசுவார்கள் என்றாலும் இவர்கள் தங்கள் வட்டார வழக்கை எந்த நிலையிலும் மாற்றிக் கொண்டது இல்லை.
இதேபோல் மதுரை வட்டார வழக்கில் தான் இயக்குனர் பாரதி ராஜா பேசுவார்..இன்று வரை தனது வட்டார வழக்கை விட்டுக் கொடுக்க மாட்டார். இதேபோல் நெல்லை கண்ணன்,அவரும் கடைசி வரை தனது வட்டார வழக்கை விட்டுக்கொடுக்க மாட்டார். வட்டார வழக்கு என்பது ஒரு பகுதி மக்களின் கலாச்சாரம்.. அதை மறப்பதோ, மறைப்பதோ.. அவர்களின் அடையாளத்தை மறைப்பதற்கு சமம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications