கோவைக்கே விடியல் வரப்போகுது.. ரூ.1,621 கோடியில் அடையாளமாகும் அவினாசி ரோடு மேம்பாலம்.. சூப்பர் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவைக்கே விடியல் என்றால் அது அவினாசி ரோடு மேம்பாலம் தான் .. கோவையில் அவினாசி சாலை தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த பாலம் எப்போது முடியும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா சாலைப் போல் கோவைக்கு அவினாசி சாலை நகரின் இதயமாக இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள அவினாசி சாலை வழியாகவே திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு போக முடியும். கேராளவில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் பிற பகுதிகள் செல்லவும், கர்நாடகா, ஆந்திரா செல்லவும் அவினாசி சாலை தான் முக்கியமான வழித்தடம் ஆகும்.

Coimbatore Avinashi Road flyover to be ready by december

கோவை அவினாசி சாலையை பொறுத்தவரை கருமத்தப்பட்டி வரை நகர்புறமாக வளர்ந்துவிட்டது. கோவை உக்கடம் தொடங்கி சோமனூர் வரை கோவை மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையின் மிக முக்கியமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள் அவினாசி சாலையில் இருக்கின்றன

இதனால் அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் தொடங்கி, பாப்பநாயக்கன் பாளையம், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு, வரை கடுமையான வாகன நெருக்கம் இருக்கும். தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வரும் சாலையாக அவினாசி சாலை இருக்கிறது. இந்த சாலையில் ஏராளமான சிக்னல்கள் உள்ளன. இதேபோல் யூடர்களும் இப்போது அதிகமாக உள்ளது. காலை மாலை வேளைகளில் கடுமையான நெரிசலை சந்திக்கும். இந்நிலையில் அவினாசி சாலையில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.1,621 கோடி செலவில் இந்த மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் காரிடர்களுடன் அவினாசி மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த மேம்பாலத்தில் கோவை அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப்கல்லூரி, விமானநிலையம் உள்பட 7 இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாலம் குறித்து அதிகாரிகள் கூறும் போது, அவினாசி மேம்பாலத்தில் தற்போதுவரை 63 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது. இறங்குதளம், ஏறுதளம் அமைப்பது உள்ளிட்ட 37 சதவீத பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இங்கு மேம்பால பணிக்காக 4 இடங்களில் உயரமான லாஞ்சர்கள் அமைக்கப்பட்டு கான்கிரீட் காரிடர்கள் இணைக்கப்படுகிறது. மொத்தம் 304 கான்கிரீட் தள காரிடர்களில் இதுவரை 190 அமைக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 114 கான்கிரீட் காரிடர்கள் இணைக்கும் பணிகள் நடைபெறும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே அவினாசி மேம்பால பணிகளை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சரவணன் தலைமையில் உள் தணிக்கைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். உப்பிலிபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் சாய்வு தளத்தின் அளவுகள் சரிபார்த்த அதிகாரிகள், விமான நிலைய இறங்குதள தூண்களில் திறனறியும் சோதனைகள் செய்தன. இதேபோல்கு இறங்குதளத்துக்காக அமைக்கப்பட்டு வரும் அளவுகளை சரி பார்த்தனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகள் கூறும் போது, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் பணி தற்போது 70 சதவீதம் முடிந்துவிட்டது. உயர் மட்ட சாலையில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்க வேண்டிய 8 இடங்களில் 7 இடங்களில் தற்போது பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான நில ஆர்ஜிதப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்ப்பட்டு வருகின்றன. வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

அவினாசி சாலையில் 10 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் அவினாசி சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தை நீடித்து பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+