Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவில் முடக்கப்பட்ட My V3 ads.. மீண்டும் இயங்க தொடங்கியது.. ஆனால் ஒரு ட்விஸ்ட்! பொதுமக்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: MY V3 Ads செயலியை போலீசார் நேற்றிரவு முடக்கி இருந்த நிலையில், அந்த செயலி இப்போது கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் சக்தி ஆனந்த் என்பவர் மை வி3 ஆட்ஸ் என்ற செயலியை நடத்தி வருகிறார். விளம்பரம் பார்த்தால் காசு தருகிறோம் என்ற இவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துள்ளனர்.

 Coimbatore based My V3 ads app which was blocked last night, is now operational but with some restrictions

அதேநேரம் சொன்னது போல அனைவருக்கும் இவர்கள் பணத்தையும் உரிய நேரத்தில் கொடுத்தும் வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் இவர்கள் நிறுவனத்தின் மீது புகார்கள் அளிக்கப்பட்டது.

முதலீடுகள்: பொதுமக்களிடம் ரூ.360 முதல் 1.20 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு அவர்களை ஏமாற்றுவதாகப் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி இந்த மை வி3 ஆட்ஸ் உரிமையாளரை நேரில் அழைத்துள்ளனர். அப்போது அவருக்கு ஆதரவாக திடீரென கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோசடி புகார் வந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்டது பேசுபொருள் ஆனது.

அப்போது விசாரணை முடிந்து சக்தி ஆனந்த்தை போலீசார் அனுப்பி வைத்தனர். தாங்கள் எந்தவொரு மோசடியையும் செய்யவில்லை என்ற சக்தி ஆனந்த், தேவையில்லாமல் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட முதலீடுகள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பேசுபொருள்: அங்குத் திரண்ட பொதுமக்களும் கூட நிறுவனத்திற்கு ஆதரவாகவே கருத்து கூறியிருந்தனர். பலரும் கூட லட்சக்கணக்கில் அதில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்தது. இன்னும் சிலரோ தங்கள் குடும்பமே இதை நம்பி தான் இருப்பதாகக் கூட கூறியிருந்தனர். அந்தளவுக்குப் பல ஆயிரம் பேர் இதில் முதலீடு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பேசுபொருள் ஆனது. அதேநேரம் அனுமதி இல்லாமல் கூட்டத்தைக் கூட்டியதாக அவர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.

இதற்கிடையே இணையத்தில் பலரும் இந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பது தொடர்பாகப் பலரும் விமர்சித்தனர். பலரும் இது மோசடியாக இருக்கலாம் எனக் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் நேற்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கைது: இருப்பினும், அதன் பிறகு காவல் ஆணையரை நேரில் பார்த்த பிறகே அங்கிருந்து கிளம்புவோம் எனச் சொல்லி அவர்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் 100+ பேரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அவரது மை வி3 ஆட்ஸ் செயலியையும் நேற்றிரவு போலீசார் முடங்கினார். இதனால் அதில் முதலீடு செய்தோர் குழம்பிப் போனார்கள்.

கட்டுப்பாடுகள்: இந்தச் சூழலில் தான் சில மணி நேரத்தில் மீண்டும் அந்த செயலி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இன்று காலை முதல் அந்த செயலி மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் புதிதாக யாரும் இதில் சேர முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.

இதில் ஏற்கனவே உள்ளவர்கள் புதிதாக யாரையாவது இணைத்தால் அதற்குத் தனியாக தொகை கிடைக்கும். இதனால் பலரும் தங்கள் தெரிந்தவர்களை எல்லாம் இணைத்துவிட்டனர். இப்போது அந்த ஆப்ஷன் முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+